மணமகள்:- சௌ.சரண்யா மணமகன்:- S.K.விக்னேஷ்குமார்
மணநாள்: 30-09-2011 வெள்ளிக்கிழமை.
இடம்:- ஸ்ரீ வாசவி மஹால், நாமக்கல்.
இறைவனின் அருளால் இன்றைய நிகழ்ச்சி
இருமனம் இணையும் இல்லறத்தின் முதல் நாள்.
சங்குக்கழுத்து உடையவளோ
சந்தித்த நொடிப்பொழுதே
சந்தோச மனமுடனே
சம்மதித்து தலையசைத்தாள்
சரஸ்வதியின் பெண்ணிவள்.
தோழியர் புடைசூழ,
தொகைமயிலாய் மங்கையிவள்
அன்னம் போல நடைப்பயில
மங்கையிவளைக் கரம் பிடிக்க
மாப்பிள்ளையாய் உருவெடுத்து
மது உண்ட வண்டாக
மங்கை நினைவில் அவனிருந்தான்.
அரங்கம் முழுதும் அலங்கரித்து
சாத்திரங்கள் முடிவு செய்து
சான்றோர் அவை முன்னிருக்க
சரண்யாவைக் கைப்பிடித்தான்
சாகரத்தில் முத்தெடுக்க.
பட்டாபியின் மகளிவளோ
மங்கலக் குரலோசை
மண்டபத்தில் எதிரொலிக்க
பட்டமதைப் பெற்றுக் கொண்டு
மகாராணி ஆனாளே
மங்கள நாண் பூட்டிக் கொண்டு.
விக்னேஸ்வரனின் அருளுடனே
விக்னேஷ்குமார் துணையுடனே
வாழ்க்கைக்கடலை சிறப்பாக
வாசமடைய செய்வாளே.
பலமான உறவுகள்
பாலமாய் விளங்க,
சான்றோர் வாக்குகள்
வாழ்விலே பலிக்க,
இனிதான நினைவுகள்
விசாலமாய் படர,
நலமும் மகிழ்வும்
வளமுடன் இணைந்து,
பேரும் புகழும்
நிலையாய் உயர,
வாழ்த்துக்கள் எல்லாம் உரமாக,
வாழ்க்கை முழுதும் சிறப்பாக,
வாழ வேண்டும் செழிப்பாக,
வாழ்த்தினோம் நிறைவாக.
அன்புடன்,
மாமா தவபபுதல்வன் @ A.M.பத்ரிநாராயணன்,
மற்றும்,
தாத்தா P.A.மாணிக்கம் செட்டியார் மற்றும் குடும்பத்தினர்.
பின்குறிப்பு:- எமது நாமக்கல் சகோதரி திருமதி.சரஸ்வதி பட்டாபிராமன் & மாமா திரு.பட்டாபிராமன் அவர்களின் செல்ல(வ)ப்புதல்வி சௌ.சரண்யாவின் திருமண வாழ்த்து மடல்.
2 comments:
மணமக்களுக்கு நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
தங்களைப் போன்ற பெரியவர்களின் நல்லாசிகள் தொடர்ந்தால் வாழ்வு இனிமைதான்.
Post a Comment