எழுதி வைத்த எழுத்துகளும் ஏட்டிலே காணவில்லை.
நினைவிலே எனை வைத்த நீயும் எங்கோ காணவில்லை.
மலர் பூத்தத் தோட்டதிலும் வாசமும் காணவில்லை.
மிதந்து வந்த காற்றிலும் தென்றலாய் குளுமையில்லை.
பனி பொழியும் வைகரையில் பாழும் மனம் இலயிக்கவில்லை.
மென்பஞ்சு படுக்கையிலும் மதி உறக்கம் கொள்ளவில்லை.
எனை மறந்த நிலையிலும் உனை மறக்க முடியவில்லை.
எனை பார்த்து சிரிக்குதடி நீ விரும்பிய உணவுகளும்.
உயிரும் உனக்காய் ஆடு(கு)தடி உண்ணநோண்பு எடுத்துக் கொண்டு.
எனக்கு உரிமை இல்லையடி அவன் கவர்ந்த பின்னாலே.
கலங்கிப் போய் இருக்குதடி கற்றுக் கொண்ட வித்தையெல்லாம்.
உடலெல்லாம் துடிக்குதடி எனை உதறிய விபரமறிய.
அழுத்தமாய் தெரியுதடி இருட்டிலும் உன் உருவம்.
பகலிலும் தெரியுதடி பக்கமெல்லாம் உன் உருவம்.
மனம் உன்னை மறக்காதடி மரணம் தழுவும் நேரத்திலும்.
எனை வாட்டிக் கொல்லுதடி எனைத் துறந்த ஏக்கம் மட்டும்.
பாலையாய் தெரியுதடி படர்ந்து நடந்த இடங்களெல்லாம்.
நினைவுகளும் கசக்குதடி நீயில்லா நிலை உணர்ந்து.
இரண்டு மனம் வேண்டுமடி கவி சொன்ன நிலைப்போல.
மறந்து வாழ வேண்டுமடி நினைவிலே ஒன்று மூழ்கிருக்க.
முடிவின்றி தெரியுதடி காட்டு வழி பாதைப்போல.
முகர்ந்து முகர்ந்து பார்க்கிறேன் நீ தொட்ட பொருளையெல்லாம்.
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் உனைத் தழுவிய உடைகளையும்.
சுற்றி சுற்றி வருகிறேன் ஒன்றும் அறியா குழந்தைப்போல .
உன் வாசம் இருந்திடவே உள்ளறையை பூட்டி வைத்தேன்.
வருடங்கள் கழிந்த பின்னும் வழிப்பார்த்து நிற்கிறேன்.
இறைவனின் முடிச்சு என்றேன் நீ அருகிலிருந்த போதெல்லாம்.
கட்டவிழ்ந்து போனதோ, நான் கண்ட
நினைத்துத்தான் பார்க்கிறேன் நீ விலகியப் பின்னாலே.
No comments:
Post a Comment