Translate

Tuesday, May 18, 2010

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைவுக்கு அஞ்சலி

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று (16.5.10) ஞாயிறு அன்று காலமானார். இதுவரை 1000 மேற்பட்ட சிறுகதைகள், 800 மேற்பட்ட நாவல் எழுதுயுள்ளார். பல இல்லத்தரசிகள் விரும்பி வாசித்த நாவல்களில் அனுராதா ரமணனின் நாவல் மிக முக்கியமானது.

இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...

சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.

இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.

பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.

நன்றிகள்: நண்பர் கவிஞர்.குகன் அவர்களின் புளோக்கிலிருந்து மறுபதிவு செய்து விட்டேன்.

பின்குறிப்பு:

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் ஒருவராவார். தினமலர் வாரமலரில் வெளிவரும் அவருடைய "அன்புடன் அந்தரங்கம்" ஆலோசைனை பகுதியை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
அவரை சந்திக்க விரும்பி, ஒரு கவிதையும் எழுதி, வாரமலர் மூலமாக அனுப்பி வைத்தேன். ஆனால் சந்திக்க முடியாமலே ஆகிவிட்டது. மிக்க வருத்தத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். 2009 பெப்ரவரி 19, ம் தேதி
''அந்தரங்கம்'' என்ற தலைப்பில் இந்த ஆம்பல் மலர் வலைதளத்திலேயே கவிதையை வெளியிட்டுள்ளேன்.

1 comment:

பாலு_ஹுப்பள்ளி. said...

நல்ல எழுத்தாளர். வருந்துகிறேன்.