Translate

Monday, August 17, 2015

அப்பாடி...!!!



அல்லாடி தள்ளாடி நான் வந்தேன்,
முன்னாடி பின்னாடி உன்னை பார்க்க.
நாள் முழுக்க எனை தாங்க,
என் இச்சைக்கு உனை முடுக்க,
தோதாகத்தான் இருப்பாயோ?
தொல்லைதனை தருவாயோ?

அங்குமிங்கும் உருட்டி பார்ப்பேன்
சிணுங்காமல் நீயும் இணங்க வேண்டும்.
கொடுக்கும் காசுக்கு சரியானு
எல்லாம் திறந்து சரி பார்ப்பேன்.

சட்டாம்பிள்ளை நானியக்க
மேனாமினுக்கி தேவையில்லை.
எழும்பும் தோலுமாய் இருந்தாலும்
ஸ்ட்ராங்கான பாடியை நான் கேட்டேன்
சவடால் விடும் தரகனாலே
தேடித்தேடி அழுத்து போனேன்.

ஒரு வழியாய் உனைத் தேடி வந்தேன்.
எனக்கும் நல்லா புடிச்சி போச்சி.
ஆசைக்கு தோதாய் நீ நடந்தால்,
அன்புடன் நானே வைத்துக் கொள்வேன்.

அப்பாடி.........!!!
விட்டேன் மூச்சு பெருசாக,
நல்ல வண்டி கிடைத்ததற்கு. 

No comments: