Translate

Showing posts with label உலக மாற்றுத்திறனாளர் தின நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label உலக மாற்றுத்திறனாளர் தின நல்வாழ்த்துகள். Show all posts

Saturday, December 2, 2017

உலக மாற்றுத்திறனாளர் தின நல்வாழ்த்துகள்

உலக மாற்றுத்திறனாளர் தின நல்வாழ்த்துகள் 💐
03\12\2017

மாறுதலாய் நாம் பிறந்தோம்
மன உறுதியுடன் வளர்கின்றோம்.
மாற்றங்கள் இருந்தாலும்
மாறுதல்கள் பலக்கொண்டு
மாறா ஊக்கமுடன்
மங்கா புகழடைய
மறந்திடாமல் செயல்படுக,

மாற்றுத்திறனாளராய் இருந்தாலும்
மற்றவர்க்கு இணையாக
மயக்கங்களைத் தள்ளி வைத்து
மறவராய் நீங்களிருந்து
மாமனிதராய் உயர்ந்திடுவீர்
மறவாத நிலை அடைந்திடுவீர்

மாலைகளோ உம் கழுத்தில்
மலைமலையாய் வந்து விழ
மகிழ்விலே மூழ்கிடுவீர்
மறவாதீர் என்றுமிதை.

என்றும் உங்களுடன்
மாற்றுத்திறனாளர் நண்பன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏