Translate

Showing posts with label இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள். Show all posts
Showing posts with label இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள். Show all posts

Tuesday, October 17, 2017

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்




பட்டாசு நமையிழுக்க
புத்தாடை மகிழ்விக்க
தோரணமாய் நினைவுகள்
அன்றிலிருந்து இன்று வரை.

புதுமையான உணர்வுடன்
புலரும் அ(இ)ந்நநாள் நோக்கி
திட்டங்கள் பல தீட்டி
காத்திருப்பில் ஒரு சுகமது.

முறுக்கு சுடும் வாசனையோ
மூக்கினில் வியர்த்து விடும்.
காற்றினிலே மிதந்து வரும்.
பலகார சுவைகளோ, நாவினில்
சுரக்க வைக்கும்.

வெடிகளின் சப்தமது
காதுகளை அடைக்கச் செய்யும்.
வாரியிறைக்கும் பட்டாசு பூந்துளிகள்
கண்களுக்கோர் வர்ணசாலம்.

ஏவுகணையின் முன்னோடி
விருந்திடும் பந்திகளாய்
வானோக்கி சீறிப் பாய
வானில் சிதறும் ஒளித்துளிகள்
கோலமிட்டு மகிழ்விக்கும்.

நீண்டதிந்த பயணத்தில்
நினைவுகளை சேர்த்து வைப்போம்.
மீண்டும் வரும் வருடத்தில்
மீட்டிடுவோம் நினைவிசையை.

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

--
அன்புடன்
உங்கள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Wednesday, October 19, 2016

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

வண்ணத்துகள்கள்
வானில் பறக்க,
எண்ணத்துளிகள்
ஊடுறுவி பறக்க,
மத்தாப்புத்துளிகள்
பரவியெங்கும் அழைக்க,
மனம் அதில் இலயித்து
வின்னிற்கு பறக்க
தொடரட்டும் வாழ்வு
வண்ணமயமாய் என்றும்.

உங்களுக்கும் 
குடும்பத்தினர் 
நட்புகள்
அனைவருக்கும்


இனிய தீப ஔி திருநாள் நல்வாழ்த்துகள்

அன்புடன்
தவப்புதலவன்
A.M.பத்ரி நாராயணன்.