Translate

Tuesday, June 30, 2015

நினைவஞ்சலி செய்தி - பாக்யலக்ஷ்மி மாணிக்கம்

  1. எங்கள் தாயாரின் நினைவு நாளில் எம் சகோதரர்கள் தாமோதரன் மாணிக்கம், ரகுராம் அவர்கள்  இருவரும் தாயைக்  குறித்தும் எமது மூத்த மகள் நிரஞ்ஜனா ஆனந்த் அவர்கள் தனது பாட்டியைக்  குறித்து வெளியிட்ட அஞ்சலி செய்திகள்:


Dear Mom. I am so fortunate to have been born as your son. Remembering you on this day June 30th. 11 years ago you left this earth to blend with nature. Your sacrifices were countless, you had been a skilled diplomat, had elephantine memory, inspired the youth to get educated and stay creative despite the fact you yourself had not been to college. You knew way more things than many of us -- the so called graduates. You nurtured a huge joint family, some might even call it a small village. Every child that came your way wanted to emulate you -- so impactful. Your generosity is boundless -- who would have thought that you had committed decades ago to donate the eyes after death for the eye donation is still not so prevalent among the masses! May you soul RIP. Bless us all from there.

*****************
Dhamo Anna: You wonderfully laid out the great qualities of mom. I have read it a few times and every word & sentence in that is so true and brings out fond memories/ heavy emotions. The list of her great skills can go on and on. To your list I can add that she is a great administrator, wise counsel, respected leader, wonderful guide, successful motivator, amazing communicator, witty person, "paddikatha medhai" and a loving soul who knows how and where to say 'no'. I am sure we all can keep talking about her greatness for long. She is a towering personality. Mom - after  a great innings and tireless service to the family you have taken the rest. May your soul be always be in peace. As Dhamoo  Anna said we are lucky to be born as your kids and we will always love you mom.
Badri Anna: Crisp and lovely homage to mom. Love u Anna.

'Dhamoo Anna.

Amma's thithi this time fell on June 29th. We had the shrartham for mom at temple on Monday.

****************
As I read both Appiya's and naina's homages to Ammiya I remember lot of events and small communications with Ammiya which has shaped me into what I am.. Really grateful to have been able to be with her for whatever time God gave me.. I too wish someday I could be at least 1% of what she was to others.. Love you Ammiya .. I know your blessings are with us always








Monday, June 29, 2015

நினைவஞ்சலி - பாக்யலக்ஷ்மி மாணிக்கம்

எமது தாயார் அமரத்துவம் அடைந்த பாக்யலக்ஷ்மி மாணிக்கம் அவர்களின் நினைவு நாள் அஞ்சலி

பட்டங்கள் இன்றியே
பட்டதாரியாய் - அனுபவத்தை 
அனுபவித்தே ஊட்டினீர்
உணவைப் போல.

இன்று துருவ நட்சத்திரமாய்
நீர் மாறி போக,
பார்வையாளன் ஆனேன் 
தூரத்தில் நின்று.

நிசம் என்பதை
மனம் மட்டும் உணர,
நிழலாகி போனீர்
சுவடுகள் தங்க.

நானும் மரிப்பேன்
ஒரு நாள் இங்கு - மீண்டும் 
சந்திப்போமா, என்றேனும்
ஒரு நாள் அங்கு.

#அம்மா! உங்கள் வாரிசுகளும்,
அவர்கள் குடும்பமும் எல்லா நலன்களுடன் வாழ, தங்கள் ஆசிகளை வேண்டி...
உங்கள் மகன்,

A.M.பத்ரிநாரயணன் ( தவப்புதல்வன் ) 

#எங்கள் தாயாரின் நினைவு நாளில் எம் சகோதரன் தாமோதரன் மாணிக்கம் அவர்கள், தாயைக் குறித்து வெளியிட்ட அஞ்சலி செய்தி:

Dear Mom. I am so fortunate to have been born as your son. Remembering you on this day June 30th. 11 years ago you left this earth to blend with nature. Your sacrifices were countless, you had been a skilled diplomat, had elephantine memory, inspired the youth to get educated and stay creative despite the fact you yourself had not been to college. You knew way more things than many of us -- the so called graduates. You nurtured a huge joint family, some might even call it a small village. Every child that came your way wanted to emulate you -- so impactful. Your generosity is boundless -- who would have thought that you had committed decades ago to donate the eyes after death for the eye donation is still not so prevalent among the masses! May you soul RIP. Bless us all from there.

Saturday, June 27, 2015

நினைவஞ்சலி - சகோதரி வசந்தா ஹரிகிருஷ்ணன் - 26/06/2015

காணும் முகங்களில் - உமைக்
காண, நான் துடித்தேன்.
என் செவியொலி குறைந்தாலும்
உம் குரலோசை அகலவில்லை.
வாடாத மலர்கள் எம் மனத்தில்
உமக்காக நிறைந்திருக்க,
உமது காலடியில் தூவுகிறேன்
உமை மனத்திலே அமர வைத்து
எமை விட்டு நீங்கள் பிரிந்த
மறக்கவியலா இந்நாளில்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பாவா B.B.S.



பல்லாயிரம் நினைவுகள்
பழுத்த இந்த நாளிலே,
மனக்கண் காட்சியிலே
கரைப் புரண்டோட.

சித்திரமாய் வாழ்க்கை
சிறகடித்து பறக்க,
எப்பொருளிலும் இருக்கும்
இறைவனை வணங்கினோம்
உமக்கு நல்லாசிகள் வழங்கி
என்றென்றும் நலமுடன் வாழ.

 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பாவா


தங்கள் நல்லாசிகள் வேண்டி,
மச்சினன் & குடும்பம்.

Monday, June 8, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Sathiabama Sandaran Satia




Sathiabama Sandaran Satia 12/06/2015

இறை தந்த செல்வமாம்
அவருனக்கு இணையாக,
இருவருக்கும் துணையாக
ஈன்ற  செல்வங்கள் உமை தாங்க

நலம் நாடும் நட்புகளும்
நாடி வந்து உமை வாழ்த்த,
நடக்கும் நாட்களும்
நலன் தந்து மகிழ்விக்க,

மகிழ்வான இந்நாளில்
அன்புடன் வாழ்த்தினோம்
இறையருள் கூடியே
இன்முகமுடன் வாழ்ந்திட.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிக்குயிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சங்கீதா பரணிதரன்


சலசலக்கும் சிற்றோடையாய்
சங்கீதமாய் உன் வாழ்க்கை,
சேர்ந்தணைக்கும் உறவாலே
சேரட்டும் என்றும் மகிழ்வுகளே.

இறை தந்த ஆற்றலெல்லாம்
இசையாய் பரிமளித்து
ஈனும் வெற்றிகளால் - மனம்
இன்பமாய் சிறகடிக்க

கண்ட கனவுகளும்
காணும் காட்சிகளும்
களிப்பை நல்கிட - ஸ்ரீ
காமாட்சியை வேண்டினோம் உனக்காக.


இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் மகளே.

சங்கீதா பரணிதரன்  - 08/06/2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சுதா ரகுநாத்

காற்றிலே நினைவுகள்
கலந்தபடி விரைந்தோட,
காலமது நிற்காமல்
கழிகிறது மறக்காமல்.

அழகான வாழ்க்கையில்
அருமையான பக்கங்கள்
அணைத்தபடி நீ நடக்க
அருகினிலே எல்லோரும்.

நடக்கட்டும்  நாட்களெல்லாம்
நலமாக மகிழ்வாக - நாம்
நாடி செல்லும் இறைவனும்
நல்கட்டும் அருளென்றும் நிறைவாக.


இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் மருமகளே

சுதா ரகுநாத்  06/06/2015

Friday, June 5, 2015

பருவம் சிறுசிலே

ஆகாய ஊர்தியாய் நினைத்து
தரையில் ஓடுவது ஆனந்தம்.

வீட்டிலே பூனையாய், தெரியாமல்
தின்பதிலொரு ஆனந்தம்.

ஓடும் நீரிலே - மீனாய்
துள்ளி குதிப்பது ஆனந்தம்.

முத்தோ சொத்தையோ - மூழ்கி
சிப்பி எடுப்பது ஆனந்தம்.

வாத்தி பாடத்தை, புரியாததை
புரிந்ததாய் தலையாட்டல் ஆனந்தம்.

தன் செயலுக்கு, பிறர் அடி வாங்கலும்,
கோள் மூட்டி முழிக்க வைப்பதும்,
உண்டியெடுத்து குறி வைப்பதும்,
ஜடையிழுத்து வேடிக்கை காட்டுவதும் ( பார்ப்பதும்),
ஆட்டத்திலே அழுகுனியாய் -
 வாயாடி, வம்புக்கிழுத்தலும்,
அடம் பிடித்து வீம்பு செய்வதும்,
சிறுவயது நினைவுகள்
வரிசையாய் வடம் பிடிக்க
இவ்வயதில் சொல்லுதிர்ப்பது
ஆனந்தத்திலும் பேரானந்தம்

காதலில் அழிந்தாலென்ன?





சின்னதாய் ஓலைக்குடில்.
தொழுவத்தில் சிவப்பு பசு.
தென்னையிடை சிரிக்கும் நிலா
காதருகே மெட்டிச் சத்தம்.
காளையின் காதல் எல்லாம்
கண் வழி எட்டிப் பார்க்கும்.
பெண்ணிவள் நெஞ்சுக்குளே
பரவசம் பாய் விரிக்கும்.
வாழ்க்கை, இதுதான்.

அரசாங்க பச்சை நோட்டும்,
அடுக்கடுக்காய் பேரும் புகழும்
பத்தடுக்கு மாளிகையும்
மாலையும் மேடையும் - தான் (நான்)
காலடி தூசு என்பேன்.

அட போ....
ஆயிரம் பேசியென்ன
மோதலில் அழியும் உலகம்
காதலில் அழிந்தாலென்ன?


நன்றி: படைப்பாளிக்கு  

படித்தேன் ரசித்தேன்
எழுதியது யாரோ!



கருத்துரைகள்:

''அட போ ...
ஆயிரம் பேசியென்ன
மோதலில் அழியும் உலகம்
காதலில் அழிந்தாலென்ன?''

ஆழ்கடல்தான் ஆழமென்றால்
காதலும்தான் பெரும் ஆழம்
ஆழக்கடலதிலே முத்து உண்டாம்
காதலிலும் முத்தைக் காண்போம்
முத்தெடுத்து முகம் மலர்ந்தால்
முத்தாகும் காதல் வாழ்வும்!
காதலினால் அழியா வண்ணம்
            ஆழ்மனதால் காதலிப்போம்!

கட்டுண்டு கிடக்கட்டும்
காதலால் மனம்.
ஆனால் 

தெரியாமல் அலைகிறாரே
காதலுக்கும் காமத்திற்கும்.

#முத்தாய் மலர்ந்த கருத்துக்கு,
முகம் மலர்ந்த மகிழ்ச்சி நண்பரே 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்






27ஆம் மணநாள் (05.06.2015). 

சற்றேன்ன சற்று
சாறுபோல் என்றும்
சந்தோச வாழ்வை
சரவணன் உமக்கருள,
சாற்றுவோம் பாவதனை
சாஸ்டாங்கமாய் பணிந்து.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பாவலரே.

Thursday, June 4, 2015

சித்திரப் பாடல் - திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி

இதழ் விரிக்க தேவையின்றி 
மனம் விரித்தேன் தொந்தியானிடம் 
ஆனந்தம் எனக்கருள 

அணங்கு நான், 
தொட்டாள துணை வேண்டி
தொடுத்தேன் பூசாரத்தை.
.

தொடுக்கும் பூஞ்சரமோ 
இவர் கழுத்தில்,
தந்தருள்வான் யான் மனமகிழ 
தகுந்த நல்லுறவை. 

கனிந்த நாட்கள் 
கமழட்டும் நல்லுறவாய் ஐயனே.

-- தவப்புதல்வன்  



இரா. கி ஆஹா தவப்புதல்வரே அருமை. நன்றி




படம்:
நன்றி திரு JayKay Jawahar Kannan with திரு Rajagopalan Srinivasan


''சித்திரப் பாடல்'' இயற்றியது :
நன்றி: திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
__________________________________________________
நீ சொல்ல மாட்டாய் எனக்குத் தெரியும்
உனக்குப் பிரார்த்தனைகள்
_____________________________________
அந்திநேர வேளையிலே அழகுசுந்தரியே நீயிங்கு
வந்ததென்ன காரணத்தை மட்டும் விளக்குயிந்த
சுந்தரச் சொர்ணமுகம் சொக்கிமகிழ வருமந்த
சுந்தரனும்யாரு கொஞ்சம் சொல்லு வீடைதீரு
பாதம்வரை பட்டொளிரும் பாவாடைப் பட்டுச்சட்டை
பாவையுந்தன் மேனியில் படருதுசிகப் புத்துணி
கோவையிதழில் கொஞ்சும் கோலப்புன் னகையில்
கோலமிகு வளையல் கொண்டையில் மல்லிச்சரம்
மலர்தொடுக்கும் விரல்கள் வனப்பு வெண்டைக்காய்
கழுத்தில் மணிமாலை காதில் லோலாக்கு
பழுத்தக் கனியாக பளபளப்பு பளிங்குமேனி
மங்கயுந்தன் எழிலில் மனதும் மயங்குதடி
சிந்தனைக்கு நேரமில்லை தன்னந்தனியேவந்து
குந்தியிருந்து யிங்கு கையில் பூத்தொடுத்து
அந்தியிலே சாமிவரம் அன்றாடம் கேட்கிறாயே
பந்தியோடு சிந்துபாடப் போவதாரு சொல்லு
சந்தியிலே இருக்கின்ற சாமிகணபதியும் மனமகிழ்ந்து
உந்தனது வேண்டும் வரத்தைத்தர இதழ்விரிப்பாய்

============================================

இப்பாடலை ரசித்து இட்ட கருத்துக்கள்:



Kalam Shaick Abdul Kader: பாவாடை தாவணியில் பார்த்த உருவமதை பா வாக்கித் தந்து, பாவாக அருந்த வைத்தீர்!


Shyamala Rajasekar நந்தவனப் பூப்பறித்து நாரிலே கட்டியதை 

சுந்தரவி நாயகனின் தாளிலே சூட்டிடுவாய் 
கந்தனின்ச கோதரனும் காத்தருள் செய்திடுவான் 

தந்திடுவான் வேண்டும் வரம்.


இளஞ்செழியன் பழனி சென்டுமல்லி சரந்தொடுத்து..
கொண்டு வந்தே
கழுத்தில் போட...

கழுத்திலொரு தாலி விழுமா...
கண்டு சொல்லு கணபதி நீ!
முந்தா நாளு வந்துபோன
மவராசன் மடலில்ல...
கடுதாசி போட்டானா...
தபால்காரன் மறந்தானா...
பூதொடுத்தேன் புள்ளாரே!
செவ்வா வெள்ளி கணக்கா
நடையா நடக்குறன்...
ஒவ்வாத மாப்புளைய எங்கிட்ட காட்டாத...
கொணமுள்ள சீலனாட்டம்...
அய்யானார கணக்கா
வீரனாட்டம் கண்டு
சொல்லு புள்ளாரே!
கொஞ்சநாள் போச்சுதுன்னா...
மனம் ஒம்பக்திக்கே நேந்து போகும்...
கண்டு சொல்லு புள்ளாரே...
எனக்கட்டும் வீரனெவன்
கண்டுசொல்லு புள்ளாரே?



இரா. கி ஆஹா தவப்புதல்வரே அருமை. நன்றி