Translate

Showing posts with label பாதங்களால் நிறையும் வீடு.. Show all posts
Showing posts with label பாதங்களால் நிறையும் வீடு.. Show all posts

Sunday, November 12, 2017

பாதங்களால் நிறையும் வீடு.


👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

என் நினைவிலும் படம் விரிகிறது.
எனது ஒற்றைப்பாத பதிவுகள்,
எங்கள் வீட்டில்
எங்கெங்கே பதிந்ததென.

எட்டு மாடி வீடுமில்லை,
எடுத்து வைக்க குறைவுமில்லை.
என் உடன் பிறப்புகளுடன்
எத்தனைப் பேர் அவ்வீட்டிலென.

எங்கெங்கு பார்த்தாலும்
எப்பொழுது பார்த்தாலும்
எந்நாளும் ஓய்வின்றி
எடுத்து வைத்த பாதடிகள்.

எத்தனையோ உறவுகளும்
என்றும் வரும் நட்புகளும்
ஏற்றியிறக்கிய பணியாளர்கள்
எல்லையில்லா அறிமுகங்கள்

ஏங்கியிருக்கும் எங்கள் வீடு 🏛️
எண்ணிக்கையிட வழியின்றி.
எங்கள் வீட்டு பாதடி சுவடுகளை
எண்ணியெண்ணி வியக்கின்றேன். 🤔🤔

எங்கும் காணா நிலையடைந்து
ஏக்கதில் மூழ்கி விட,
ஏற்றமிறக்கம் வாழ்நாளில்
என்றுமென உணர்வில் கொண்டேன்.

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏

#படைப்பு குழுமத்தில், ஓரே தலைப்பில் பல கவிஞர்கள், பல்வேறு உணர்வு கலவைகளை சிறந்த கவிதைகளாய் வடித்திருந்ததைக் கண்டதும். எங்கள் வீட்டில் பதிந்த பாதடி சுவடுகளின் நினைவுகள் என்னிலும் ஓடத் துவங்கியதின் விளைவேயிது.