Translate

Showing posts with label சுயம்! சுயம்!!. Show all posts
Showing posts with label சுயம்! சுயம்!!. Show all posts

Saturday, October 21, 2017

சுயம்! சுயம்!! - 2



அனுபவப்பாடங்கள் அலையலையாய்
கற்றதை பலவும் நான் மறந்தேன்.
ஒரு சான் நானேற, 
ஒரு முழம் வழுக்கி விட,
இப்பக்கம் தவிர்த்து விட்டு
மறுபக்கம் ஏறி பார்க்க,
அப்பக்கமும் கீழிறங்க
வேறு பக்கம் தேடி செல்ல,
பல பக்கமும் வழுக்கி வழுக்கி
போதுமடா சாமியென 
ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆசைகள் தொடர்ந்து வர,
அதில் பலதை அடக்கி விட்டு,
ஆ ப் போகும் நாட்களினி
அவதிகளின்றி அது கழிய,
அனுதினமும் துதித்திருப்பேன்
ஆள்பவனை என்றுமினி.

தேவைகளைக் குறைத்துக் கொண்டால்???????

ஆழமான பெருமூச்சு 
பொருளுடன் வெளியேற,
ஆனந்தமாய் திகழ வேண்டும்
அவனடி புகும் நேரம்.

எழுதி வைத்த அவன் குறிப்பும்
என் குறிப்பும் இணைந்திடுமோ?
ஏற்று அவன் கொள்வானோ,
விரைவிலவன் திருவடியில்?
வாழ்ந்தது போதுமைய்யா
வாழ்வதினி பாரமைய்யா.

என்றவன் எனை அழைப்பான்
ஏக்கமுடன் நான் காத்திருக்க.
விரும்புகிறேன்
முன்கூட்டி உமக்கியம்ப.

எத்தனையோ நினைவுகள்
எழுத்துகளில் கொட்டி விட,
இயலுமா யானறியேன்
இந்நிலை மட்டும் உண்மையென
யான்றிவேன்.

-- 
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

சுயம்! சுயம்!! - 1

சுயமாய் பிறப்பில்லை
சுகமான வளர்வில்லை.
யார் யாரோ கைப்பிடிக்க
மெல்ல நான் நடைப்பயில,
கற்றதும் சுயமில்லை
அனுபவங்கள் பட்டிருந்தும்
அதில் பல
அணைத்தெமக்கு  ஊட்டவில்லை.

வெகுளியாய் நான்
வெள்ளேந்தியாய் இதுவரை.
இனியும் தொடருமோ
இறைவனே சாட்சியாய்.

கற்றது சிறுந்துளிகள்
கை விட்டதோ பெருந்துளிகள்.
ஒட்டிக் கொண்டது நூலிழையாய்
அது தாயின் ஓர் அனுமானம்.

ஊனமது ஆனபின்னே
உயிர்ப்பிக்க முடிவெடுத்து,
முக்கியெடுத்தார் மருத்துவத்தில்
முழுமையாய் எனையாக்க.

எழுத்தோ ஆழமாய்
எம் தலையில் பதிந்து விட,
சிறிதாக சலுகையவன்
எழுத்திலே மாற்றமிட்டு
கொடுத்தானே இந்நிலையை.

தொட்டதே போதுமென.
கோளுடன் நடை பயின்றேன்,
அறிவெனும் ஆற்றலடைய,
அனுகிரகம் அளித்தாலும்
அந்த வழி புறந்தள்ளி
ஏமாற்றி எனை கொன்றேன்.

விட்டு விட மனமின்றி
வழிய வந்து எனைக் கொண்டான்
தமிழுருவில் நடைப்பழக.

நல்லதோ கெட்டதோ நான்றியேன்
நவிலும் நாவுக்கு சூடுகள் பல கிடைக்க,
பழகிடுவேனோ இனியேனும் புது வழியில்
தங்க தமிழன்னை துணையுடனே.

வாழ்க்கை நிலை முடிவினிலே
வந்துறையும் நேரத்திலே,
வார்த்தைப் போரைத் தவிர்த்து விட்டு,
வாழ்த்துரையில் மகிழ்ந்திருப்பேன்.
வஞ்சனையின்றி வாசமாக
வாரி வழங்க அருள் கிடைத்தால்.

வயதான இக்காலமது
வதங்காமல் 
அடைய வேண்டும்
இறுதியதை.

-- 
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Chelliah Very nice...
congrats frnd
See Translation


LoveShow more reactions
Reply
1
36 mins
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M நல்லதொரு பொழுதினிலே, 
நயமான வாழ்த்துரைத்த, 
நட்புக்கு, 

நாளையொரு புது விடியல், 
நலமாய் துவங்கிட, 
நல்வாழ்த்துகள் கூறி யான், 
நன்றியுடன் 
எமது இரவு வணக்கம். 🙏🙏

-- 
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


LikeShow more reactions
Reply28 mins
Manage
Chelliah விடியலுக்காய்க்காத்திருக்கும்...
இரவென்ற
பெயருண்டு..
விரட்டிவிடும்
செங்கதிரோன்...
சிரமுயற்த்தி
வருகையிலே...
குருவாய்த்துதித்திடவே..
வரட்டும் விடியல்...
இரவுக்கும்
என் வணக்கம்
இனியவரித்
தோழனுக்கே
வாழ்திட்டேன்...
வானுயிரச்சேர்த்திட்டேன்... 
வான்புகழ
உன்வரிகள்..
நன்றி....
பத்ரியாரே