Translate

Tuesday, November 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Vithyasagar Vidhyasagar






வித்யாவாணியின் கடாஷம்
விரியட்டும் உம் படைப்புகளில்
விண்ணளவு உயரட்டும்
வியக்கட்டும் பார் முழுதும்.
நலனுடன் விளையாட,
மகிழ்வுடன் கவிப்பாட
மனமது துள்ளியாட,
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞரே.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sri Vasavi Priya Rajesh





ஒவ்வொரு கேக்கும் 
உன் பிறந்த நாளை 
நினைவூட்டட்டும்.
அத்தனையும் சுவையாய் 
மனத்திலே இனிக்கட்டும்.
உள்ளத்திலே மகிழ்வும் 
உடலிலே நலனும்,
இளமையாய் நிலைத்திருக்க,
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ வாசவி ப்ரியா.   




Monday, November 24, 2014

கலங்குகிறது - ஹைக்கூ....






காணா நெஞ்சமும்,
கண்ட கண்களும்
''கலங்குகிறது''

மகிழ்வான நன்னாள் வாழ்த்துக்கள் அன்பு நட்புகளே .

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - கவிஞர் மைக்கல்கொலின்






கவிஞர் மைக்கல்கொலின் 

உள்ளங்களோ கொடிகளாய் பிணைந்திருக்க,
மலர்களாய் வாரிசுகளோ பிறப்பெடுக்க,
உறவுகளோ இயற்கையான உரமாக,
வாழ்வோ செழிக்கட்டும்  மிக மகிழ்வாக.

மகிழ்வான திருமண நல்வாழ்த்துக்கள்.

Saturday, November 22, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Asukavi Navaneetha Krishnan




Asukavi Navaneetha Krishnan


கிருஷ்ணனின் லீலைகளோ அளவற்றிருக்க,
அத்தனையும் மகிழ்வாய் நமக்கது இருக்க,
நவநீதனாய் உடனிருந்து அருள் பாலிக்க,
நலன்கள் யாவும் நிலைத்திருந்து உமை காக்க,
இனிய இந்நாளில் வாழ்த்தினோம் அன்புடனே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய நல்வாழ்த்துக்கள் - ஸ்வேதா




விழி வழிக் கண்டு
செவி வழிக் கேட்டேன்.
வழிந்த சொற்களால்
நிறைந்தது நெஞ்சு.

பணிகளில் நிறைவாய்,
பக்குவம் அடைய,
நிறைந்த வாழ்த்து
மகிழ்வுடன் உனக்கு .

இனிய நல்வாழ்த்துக்கள் ஸ்வேதா .  

குறுங்கவிதை




விடியும் பொழுது
விழித்துக் கொள்ளும் எண்ணங்கள்
விரியுமே மனத்தில்
விண்வெளி போல.


இனிய திங்கள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.. =D

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் - ‎Paramasivam Udayakumar





பாதைகளோ கடினமாக,
படிகளெல்லாம் உயரமாக,
பதறாமல் துணிவுடனே,
பகுத்தறிந்து நிலையாக
உச்சியை அடைந்திடவே
உமையே வாழ்த்தினோம்
மிக்க மகிழ்வுடனே.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Thursday, November 13, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து - Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh




Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh

காணக்கோடி பலயிருக்க,
கண்டு நீயும் மகிழ்ந்திருக்க,
கருவறையில் காத்திருந்து 
காண வந்தாயோ கனவுலகை நீ.

பார்த்திட்ட உடனே 
பண்பலையாய் நீ.
பரவசத்தில் நாங்கள் 
பார்த்ததும் உன்னை.

உன்னினிய ஒலிகளுக்கு 
உருவமில்லை எந்நாளும்.
உருபோட பார்த்தோமே 
உச்சரிக்கும் உன் ஒலிகளையே.

வளர்ந்திட வேண்டும் 
நலமுடன் நீ.
வாழ்த்திட வந்தோம் 
மகிழ்வுடன் நாங்கள். 



--
இப்படிக்கு
Uncle.A.M.பத்ரி நாராயணன்.

Aunty.& Family

Monday, November 10, 2014

இணைந்து - குறுங்கவிதை






புதுப்புது கோலங்களில்
பூக்கும் புன்னகையும்
 கதைகள் சொல்லுமோ
விழிகளுடன் இதழ்களும்

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

Sunday, November 9, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Jayanthi Sai









இனிமையிலும் இளமையாய்
தொடுத்த பூஞ்சரமோ
வாடாமல் மணம் வீச,
இறைவனின் அருளால்
நலனும் மகிழ்வும்
என்றென்றும் நிலைத்திருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி. 

குறுங்கவிதை




காய்ந்த மலர்களும்
பூரிப்படைகிறது,
நீ முகர்ந்ததை எண்ணி.

இனிய காலை வணக்கம் நட்புகளே .

Saturday, November 8, 2014

நட்புக்கு வரவேற்பு - Pacha Yappan & Kjt Pushparaj






Pacha Yappan & Kjt Pushparaj

இன்றைய நாள் மகிழ்வாய்,
இனி வரும் நாட்கள் நட்பாய்
மனத்திலே மாசுகளின்றி தொடர,
வாழ்த்தியே வரவேற்கிறோம்
எமது நட்பு குழாமிலே
 நீரும் ஒரு நட்பூவாக இனித்திகழ.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பரே.  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Gayathri Srikanth






Gayathri Srikanth


சீரான வாழ்வுக்கு,
ஸ்ரீனிவாசனும் ஓதுகிறார்
காயத்ரி மந்திரத்தை. :P

சாவித்ரியும், சரஸ்வதியும்
தன்னகத்தே கொண்ட நீயும்
 மகிழ்விலே நீராடி,
 நலமுடன் பறந்தோடி
சிறப்பாக வாழ்ந்திடவே
வாழ்த்தினோம் உமை இன்று.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Palaniappan Chidambaranathan Rajapalayam








Palaniappan Chidambaranathan Rajapalayam


குறைவிலா நலனும்
குன்றா  மகிழ்வும்
குன்றிலிருக்கும்
குமரனவன்  அருள
துதித்தே வாழ்த்தினோம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - R.c. Palaniappan





R.c. Palaniappan

தீர்த்தாடும்
தில்லையம்பன்
திருவருளில் என்றும் நீங்கள்
திளைக்கவே பிரார்த்தித்தோம்
இனிய இன்னனாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Wednesday, November 5, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Umaa Shaankar







Umaa Shaankar

ஈருருவை ஓருருவாய் தாங்கி,


வையகத்தை வாழ வைக்கும்,


அர்த்தநாரி ஈஸ்வரனின் 


அருளுமக்கு அன்றாடமிருக்க,


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

நண்பர் உமா சங்கரே.




Tuesday, November 4, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Siva Srini Vasan





Siva Srini Vasan

சில்லென்ற  நிலையில்
சிலிர்ப்பான உணர்வில்,
சிறப்பாக வாழ
அருளட்டும் உமக்கு,
சிவனும் ஸ்ரீனிவாசனும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. 

Saturday, November 1, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Anitha Mithu




அன்றலர்ந்த மலர்களாய்
அற்புத நிகழ்வுகளுடன்
ஆனந்த நாட்களாய்
அனுதினமும் கழிய,
அனிதா முத்து தோழிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்




பாச வலைகள் பின்னி,
பசுமையான நினைவுகளுடன்,
பறக்கட்டும் மனது,
பரந்த இவ்வானிலே.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..




சொல்லுங்கள்

நல்லவனாய் நடிக்கும்
நயவஞ்சகன் இல்லை நான்.
மனத்திலே படுவது
எழுத்திலே பதியுது.

மருத்துவம் பார்க்கவோ
மருத்துவன் இல்லை நான்.
குறைகளை களைந்துக் கொள்ள
குறித்துக் காட்டி சொல்லுங்கள்.