Translate

Showing posts with label மன்மத காதலனே. Show all posts
Showing posts with label மன்மத காதலனே. Show all posts

Friday, July 20, 2018

ஏ… மன்மத காதலனே






ஏ… மன்மத காதலனே
++++++++++++++++++++

நினைவுகளில் தோளணைத்து வருகிறாய்
நிழலாய் என்னோடு.
ஏனென்னை தவிக்க வைக்கிறாய்
தனி(மையில்)யாக காக்க வைத்து. 11

எங்கெங்கு நோக்கிடினும்
காதலனே காத்திருப்பான்.
ஏனோ இங்கு தலைக்கீழாய்
காத்திருக்கிறேன் உனக்காக. 20

இளைத்திருக்கும் என் இடையை
இரும்பு வளையமாய்
உன் கை வளைத்திருக்க,
நாம் இருவரும்
இந்நீரோரம் இணைந்து செல்லும்,
நேரங்களை எண்ணியெண்ணி,
மனமோ சரசமாடுகிறது உன்னிடத்தில்.
விழிகள் மட்டும் மூழ்கியிருக்கு,
இயற்கை அழகில். 43

விரைந்து வாடா என் காதலனே,
ஓரிரு கணங்களாவது
உன் அணைப்பில் சிறைக்கொண்டு,
என்னையும் நீ தாங்கிக் கொள்ள. 56

விழிமீன்கள் தூண்டிலில்
மாட்டிக்கொள்ள,
இயற்கை வழியில் மூழ்கியிருப்போம்
காதலைச் சுவைத்தப்படி. 64

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏