Translate

Showing posts with label சரித்திரத்தில் நிலையாய். Show all posts
Showing posts with label சரித்திரத்தில் நிலையாய். Show all posts

Saturday, April 21, 2018

சரித்திரத்தில் நிலையாய்





கலங்க வைத்தார் கொடுங்கோலராய் ஹிட்லர்
கலகலக்க வைத்தார் வளைத்தடியாளராய் சார்லி_சாப்ளின்.
குமரனும் நடுநடுங்கினான் ஹிட்லரை நினைத்து.
குலுங்கி சிரித்தனர்
குடுகுடு கிழவரும் சார்லி_சாப்ளினை கண்டு. 18

உலகை தன் வசப்படுத்தி
அடக்கியாள ஹிட்லர் துணிந்தார்.
சார்லி_சாப்ளின் நடிப்பின் கலையால்
உலகை தன்வசப்படுத்தி மகிழ்ந்திட வைத்தார்.
துருவங்கள் இரண்டாய் துலங்கினர் இருவரும். 35
அச்சத்தில் ஆழ்த்தி சோகத்தில் வீழ்த்தினார்
ஹிட்லர் தொடர்ந்து.
வருத்தத்தை குறைத்து
மகிழ்வில் மலர செய்தார்
வளர்பிறையாய் சார்லி_சாப்ளின்.
இருவரின் வாழ்விலும் சோகமே நிறைய. 52

சார்லி_சாப்ளினோ, மறந்தவராய் கொடுத்தார்,
கும்மாளமிடும் மகிழ்வை.
மறக்காதவராய் திகழ்ந்தார்
ஹிட்லர்,
தன் மறைவிலும் சோகத்தை சுமந்து. 64

சரித்திரத்தில் நிலையாய் இரண்டு.
கல்லாய் ஒன்று.
புன்னகைக்கும் பூவாய் ஒன்று. 72


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏