Translate

Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts
Showing posts with label குறுங்கவிதைகள். Show all posts

Friday, November 10, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 2



சந்தனக்காப்பு அலங்காரம்
தினமும் நடைப்பெறுகிறது
ஏழையின் வாழ்வு போராட்டம்

நெசவாளியின் கட்டுத்தறி
கவி பாடுகிறது
இயக்கப்பட்ட ஒலிநாடா.

சுவற்றுக்கோழி
சப்தமிடுகிறது
தெருவிலொரு குழந்தை

சுவற்றில் நாள் காட்டி
காற்றில் ஆடுகிறது
தலையாட்டி பொம்மை

துணிகள் காய்ந்தது
ஈரமின்றி
கல் நெஞ்சம்

வண்ணப்பட்டம்
காற்றில் பறக்கிறது
கிழித்து போட்ட காகிதங்கள்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

சென்ரியூ வகை கவிதைகள் - 1

ட்டிலில்


குழந்தைத் தொட்டில்
ஊஞ்சலாடுகிறது
மின்கம்பியில் தூக்கனாங்குருவி கூடு

இனிப்பு பலகாரம்
தூக்கில் தொங்குகிறது
கிணற்றில் வாளி

சொத்தை பல்
ஆடுகிறது
சாவிக்கொடுத்த பொம்மை.

ஈயம் போன பித்தளை பாத்திரம்
பல்லிளிக்கிறது
காரை பெயர்ந்த சுவர்

டெங்கு கொசுக்கள்
கொண்டாட்டம் போடுகிறது
அங்கொரு மனிதர் கூட்டம்



--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Thursday, October 19, 2017

சாக்கடையில் - குறுங்கவிதைகள்

பார்வையில்
பட்டது(ம்)
பழுத்தது
பறிக்கயென
''பழம்''

=====================

வேடனின் 
வேட்டையால்
வெறுண்டோடியது
''பறவை''

============================

சல்லடையில்
சல்லித்தாலும்
சிறிதும் நிற்காது
''தண்ணீர்''

===========================

சாக்கடையில்
தாமரை
சங்கமமானது
இறைவனிடம்.

===========================

ஓட்டில்
ஒழுகியது 
''மழைத்துளி''

====================

ஓம் - குறுங்கவிதைகள்

ஓடிய கால்கள்
ஒரு போதும்
ஓயாது
ஓரிடத்தில்.

================

ஓடாது
ஓடு பாதையின்றி
விமானம்

===================

ஓம்
ஒலிக்குமே
ஓங்காரமாய்

================

ஒருவனே எனினும்
ஒன்பதும் அவன் கையில்.

=======================

ஓலமிடுவதும்,
ஒடுங்குவதும்,
ஒதுக்கியதும்
ஒட்டிக் கொள்வதும்
''நாம்''

====================

கலையாகும் - குறுங்கவிதைகள்

காற்றில் 
கலந்தது
கள்ளி வாடை.

=========================

கல்லும் 
கலையாகும்
கற்சிலையால்

===========================

காயும்
கனியாகும்
காலத்தில்

=========================

கலையாகும்
காதலால்
காத்திருப்பது.

===========================

வேலியில் பச்சோந்தி
வேலியாய் காவல்காரன்

==============================

ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்


அருமையான ஹைக்கூ கவிதை வாசம்
நட்பே...


1 சேற்றில் பிறந்தது..
ஒரு சிலந்தி வலைபின்னி..

2 சொல்லிலே
ஒரு சுல்லி...
வயிறு எரியுது
வறுமையிலே..

3 நோயும் நொடியுமாக..
தாயின் மடியிலே
தலைசாய்க்க..
ஒரு தண்டனை


Reply
1
11 mins
Remove

உம்முடையது
மேலும் 
தூக்கல்

வாசனை,
ஹைக்கூவில்
எமதினிய நண்பரே. 😂😂




தூக்கிலிட்டாலும்
துளியும் கலங்காது
எம் மனமே..

சந்தனமே
உங்கள் மணம்
சார்ந்ததெலாம்
தங்கமனமுங்கள்
மனம்..
போற்றுகிறோம்
கவியரசே
புகழ்கிறோமுங்கள் கவி...
நன்றிகள் நட்பே!!!!



Kanaga Rani கல்லும் 
கலையாகும்
கற்சிலையால்.....


அழகிய வரிகள். .



😂

கட்டு சீட்டாய் - குறுங்கவிதைகள்


கள்ளிப்பால்
காய வைக்கும் 
காயத்தை.
#காயத்தை = உடல் வெட்டுகாயம்
==========================

கள்ளிப்பால்
கல் நெஞ்சாய்
காற்றிலேற்றும்
சிசு வாழ்வை ( உயிரை)

============================

காற்றில்
கலந்தது
 காயத்து மணம்

#காயத்து = பெருங்காயத்து
=====================

காற்றில் 
கரைந்தது
காயம்

#காயம் = பெருங்காயம்
===========================

கடும் புயலில்
கலைந்தது
கட்டு சீட்டாய்
கட்டிடங்கள்

=============================

புகழ் மழை - குறுங்கவிதைகள்

கடும் புயலும்
காணச் செய்யும்
காட்சியை
கடைசி உயிரை.

======================

கல்லும்
கரைந்தது
காற்றில்
கலந்தது
''கற்தூசி'

====================

காலை விடிந்தது
கலகலத்தது உயிரினம்
காற்றில் வந்தது
கலப்படமாய்.

=====================

விடிந்தது(ம்)
விரிந்தது
விந்தை(யாய்) 
வானில்
''வெளிச்சம் \ உதயம்''

====================

வான் மழை
புவியில்.
புகழ் மழை
நினைவில்.

===================


ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Chelliah " மண மேடையில்
பெரும் கூட்டம்..
மங்கையவள்

பிணவோட்டம் "

ஏதோ முயற்சி..
கல்லெரிக்கு
நன்றி.


முயற்சிகளும் சிறப்பாக
முன்னெடுக்கிறது எமக்காக,
வளமான சொற்களில்
வனப்பாக உருவெடுக்கும்
உம் கைவண்ணம் பாவடிக்கும்
எம் நெஞ்சத்தை குளிர்விக்கும். ☺️

நட்புடன்,
தவப்புதல்வன். 🙏

பெரிது - குறுங்கவிதைகள்

ஊறுகாய்(யும்) 
உறும்
உற்று நீர்.

============

கோவில் 
வேண்டுமோ
மதுக்கடை

====================

தொலைகிறது 
மயக்கத்தில்
செல்வமும்
வாழ்க்கையும்

====================

பழைய நோட்டு
செல்லாது
வழியில்லா ஊருக்கு.

===================

வாங்குவதை விட
பெரிது
கொடுப்பது
''மரியாதை''

=========================