Translate

Showing posts with label வண்ணத்துப்பூச்சியல்ல தேவதை நீ. Show all posts
Showing posts with label வண்ணத்துப்பூச்சியல்ல தேவதை நீ. Show all posts

Monday, January 29, 2018

வண்ணத்துப்பூச்சியல்ல, தேவதை நீ


படப்படக்கும் உன் சிறகுகளுடன்,
படப்படக்குமே இதயமும் துள்ளி.
நீ சிறகடித்து பறக்கையிலே
சிறுவவர்களும் அபிநயப்பர் கைகளை விரித்து.

என் நினைவுகளில் உன் வண்ணங்களும்,
என் விரல்களில் உன் சிறகின் மென்மையும்,
இன்னுமிருக்கிறதே என் சிறு வயது உணர்வுகள்.
பிசிரடித்து போகாமல்.

உனை காணும் போதெல்லாம்
மனமும் இலகுவாகிறது,
கடினமான கால சூழ்நிலை
திரும்புகிறது இளமைக்கு.

வண்ணங்கள் குறைவெனினும்
சிற்பியின் கைவண்ணத்தில்,
கலந்து விடுகிறதே நினைவுகள்
என் கையிலேயே நீ அமர்ந்திருப்பதாய்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏