Translate

Showing posts with label சொல்லக்கூடாது தான். Show all posts
Showing posts with label சொல்லக்கூடாது தான். Show all posts

Sunday, December 31, 2017

விடியலில் நான்கு – 1 சொல்லக்கூடாது தான்



ஒன்றும் தவறாய் சொல்லக்கூடாது
தூற்றி எதையும் சொல்லக்கூடாது
நடவாததைச் சொல்லக்கூடாது
ஒற்றியெடுத்து சொல்லக்கூடாது
ஒன்பதாய் மாற்றிச் சொல்லக்கூடாது
ஒண்டியிருந்து சொல்லக்கூடாது
ஒதுங்கியிருந்து சொல்லக்கூடாது
ஒப்புக்காய் சொல்லக்கூடாது
ஓரவஞ்சனையாய் சொல்லக்கூடாது
ஒன்றும் அறியாததை சொல்லக்கூடாது
ஒப்புதலின்றி வெளியே சொல்லக்கூடாது
ஒப்பனையிட்டு சொல்லக்கூடாது
ஓங்காரமிட்டு சொல்லக்கூடாது

இவைகளின்றி

மாறுப்பட்டு சொல்லக்கூடாது
மாற்றம் செய்து சொல்லக்கூடாது
மாற்றி மாற்றி சொல்லக்கூடாது
ஏமாற்றச் சொல்லக்கூடாது
வீம்புக்காய் சொல்லக்கூடாது
வீண்பழி சொல்லக்கூடாது
காணாததை கண்டதாய் சொல்லக்கூடாது
கருத்தை மாற்றி சொல்லக்கூடாது
கதைத்திரித்து சொல்லக்கூடாது
களவு செய்ய சொல்லக்கூடாது
மறந்து நீங்கள் சொல்லக்கூடாது
மறைத்து நீங்கள் சொல்லக்கூடாது
மறதியாய் எதையும் சொல்லக்கூடாது
தேவையில்லாததை சொல்லக்கூடாது
தேவையின்றி சொல்லக்கூடாது


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன் 🙏