காதலது இல்லாமலா
கட்டியெனை நீ அணைத்தாய்?
காமமது இல்லாமலா
கட்டிலில் துணைக்கழைத்தாய்?
கவர்ந்து நீ சுவைத்து விட்டு
கள்வனென பெயர் கொடுத்தாய்.
கழிச்சடை நானென
காட்சியாய் ஆக்கி விட்டாய்.
கல்லாய் போன உன் நிலையால்
கலக்கி விட்டாய் என் வாழ்வை.
கலங்கிய சேறாய் மாற்றி நீ
கலக்கமடைய செய்து விட்டாய்.
காலச்சுவட்டில் நானின்றி
காலமது பதில் கூறும்.
கண்டதே போதுமெனக்கு
கடைசியாய் உன் கோலம்.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.