Translate

Showing posts with label இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, December 1, 2017

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அருளளிக்கும் ஆண்டவனின்
அருள் உமக்கு இதமளிக்க,
நிறைந்திருக்கும் இனிப்புகளும்
திகட்டாமல் நிறைவளிக்க,
காற்றின் இடைவெளிகள் 
குறைந்துமை குளிர்விக்க,
ஆமைகளாய் ஆசைகள்
வெற்றிகளை குவித்து விட,
வளம் நிறைந்து
நலம் குறையா மகிழ்விலே
நீங்கள் திளைக்க,
ஆசிர்வதித்தோம் இருவருமே
உங்களினிய திருமணநாள்
மகிழ்வுக்கு தாமதமாய்.


அன்புடன்,

Saturday, August 3, 2013

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்



இன்று திருமண நாளைக் கொண்டாடும்
எனது அம்மா திருமதி. சுபி நரேந்திரன்
தம்பதியருக்கு உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
-
மலரே உன்னவர் முதல்
மல்லிப்பூ சூடிவிட்ட நாளிதுவே
செங்காந்தாள் பூமலரே நீ
செந்திலகம் ஏற்ற நாளிதுவே
சிரிக்கின்ற செங்கிளியே
மஞ்சற் கயிர் கழுத்தேரே
கண் கலங்கி நிற்கிறியே
தாய்வீடு வீட்டு போகணுமே
கவலைகளை சீதனமாய் சுமந்தபடி
மஞ்சளிடும் மரிக்கொழுந்தே
மலர் மஞ்சமேற்ற நாளிதுவே
மல்லிக் கொடி கைப்பிடிக்க
பிள்ளைக் கிளி என்று வர
சிறு பிள்ளையென திரிந்தவளை
தாய்மையில் தவழவிட்ட நாளிதுவே
உன் மண நாள்
திருமண நாள் வாழ்த்துக்கள்
மணம் நிறைந்ததாக
அமையட்டுமென
மண நாளில் வாழ்த்துகிறேன்
மனம் நிறைய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை..ஆசி கேட்டு வணங்கி நிற்கின்றேன்!


By:
 
https://www.facebook.com/photo.php?fbid=616224231742310&set=a.287220821309321.74669.100000642151988&type=1&theater