Translate

Thursday, December 30, 2010

2011 ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்து.






புத்தாண்டு விழா என
புதுமையாய் கொண்டாட
வேண்டாம் அம்மணம்
வேண்டுமே அமைதி.
சீர்படச் செய்ய
சீரிய சிந்தனை
செயலிலே திறமை
செய்வோம் உணர்ந்து.
உலகைக் காக்க
உன்னத செயல்கள்
கற்பூரமாய் எரிந்து
கடமையை செய்வோம்.
அன்பைக் காட்டி
அரவணைத்துக் கொள்வோம்.
புரிந்துக் கொண்டு
புனரமைத்துக்கொள்வோம்.
நண்பராய் நாடினோம்
நயம்பட உரைக்க.
புத்தாண்டு முதலே
புது வாழ்வு மலர,
இனி வரும் நாட்களெல்லாம்
இன்பமாய் தொடர,
வாழ்த்தினோம் உமையே
வளமும், நலமும் என்றுமே நிலைக்க.
அன்புடன்,
தவப்புதல்வன்.

Sunday, December 26, 2010

என்னச் சொல்ல

*கட்டி வைத்த குளங்களெல்லாம்
காணமல் போகுதம்மா.
கயவர்களின் செயலாலே
கட்டடங்களாய் ஆகுதம்மா.

*கண்டபடி அழிப்பதாலே
வான்மழையும் மறையுதம்மா.
பனிமலைகளும் கரைவதாலே
பாறைகளாய் தெரியுதம்மா.

*பரந்திருந்த பசுமைநிலம்
பாலைவனமாய் மாறுதம்மா.
பாவப்பட்ட மனிதர்களோ
பரிதவித்து நிற்கையிலே,
பாவிமகன் இவன் மட்டும்
புரள்கின்றான் கோடியிலே.

*செலவின்றி கிடைத்த நீரை
செல்லரித்து போக விட்டான்.
செலவழித்து ஊரையவன்
செழிப்பாக்கப் பார்க்கிறான்.

*ஆறிவற்ற செயலாலே
ஆற்றையவன் காக்காமல்,
நன்னீராய் கிடைத்ததை
உப்புக்கடலில் கலக்க விட்டான்.

விசமான எண்ணங்கள்.

*வரண்டிருந்த இடங்களெல்லாம்
வளமாக மாறிடவே,
வருங்கால சந்ததியர்
நலமாக வாழ்ந்திடவே

வேறுபாடு நினைக்காமல்
வெட்டினர் குளங்களை
வேட்கை தீர அருந்திடவே.

*விசாலமான எண்ணங்களால் - அன்றே
விவேகமாக கட்டி வைத்தார் குளங்களை.
விசமான எண்ணங்கொண்டு - இன்றோ
செய்கின்றார் கெடுதல்களை.

*குளங்களாய் இருந்த இடம்
குட்டைகளாய் ஆனதே.
நன்னீராய் இருந்ததும்
கழிவுநீராய் போனதே.

* குன்றிருந்த இடங்களையும்
குண்டு வைத்து தகர்கிறான்.
குளம் இருந்த இடங்களையும்
குப்பைப் போட்டு நிரப்புகிறான்.

*காட்டிலிருந்த மரங்களை
கண்டபடி வெட்டுகிறான்.
காட்டுவிலங்கு அத்தனையும்
கண்மூடி அழிக்கிறான்.

*இயற்கையாய் இருப்பதெல்லாம்
இல்லாமல் செய்வதாலே,
செயற்கையாய் படைப்பதெல்லாம்
செயலிழந்து போகுதே ( போகுமே).

Monday, December 20, 2010

புதிதாய் விடியல்

அறியாத பிள்ளை நான்
அறிந்துக் கொண்ட போது தான்,
தெரியாத உன்னைத் தான்
தெரிந்துக் கொண்டேன் நானும் தான்.

விடியும் பொழுதை நோக்கித் தான்
விழித்திருந்தேன் நானும் தான்.
விடிந்த பின்னே நீயும் தான்
விழி பதித்தாய் வழியில் தான்.

கண் பதியும் போதெல்லாம்
கண் அசைத்தாய் நீயும் தான்.
அசைகின்ற உன் கண் பார்த்து
அசைந்தது என் மனதும் தான்.

வாய் திறக்கா என்னைத் தான்
திறக்க வைத்தாய் நீயும் தான்.
பேச வைத்த உன்னிடம் தான்
மயங்கிப் போனேன் நானும் தான்.

எடுத்துக் கொடுத்தாய் அடிகளையே
எழுதி வைக்கச் சொல்லித்தான்.
எழுதி வைத்த அடிகலெல்லாம்
ஏட்டிலிருந்து சொல்லியது தான்.

பொழுது அமரும் நேரத்தில்
புரிந்துக் கொண்டேன் அனைத்தும் தான்.
விடியும் வரை காத்திருப்பேன்
புது விடியலைக் காணத்தான்.

-தவப்புதல்வன்.

அம்மா........





உயிரின்றி நீ மறைந்தும் போகலாம்
உனை நான் மறந்தும் போகலாம்.
உறவு மட்டும் போகாதே
நீ எனைப் பெற்றதினால்.


- தவப்புதல்வன்.

நேரில் வந்த காரிகை




கண் விழித்து நோக்க
கலைந்தது உறக்கம்
கயல்விழியால் முன் நிற்க,
கணைத்தேன் என்னவென அறிய.

கர்ணனுக்கு தம்பியாய்
கண் அயர்ந்து விட்டீரோ?
கலைந்ததோ கனவு?
கரைந்ததோ சோர்வு?

காணங்கள் பாடியாடி
கன்னியிடம் சொக்கினீரோ?
கனவிலே வந்த தேவதை யாரோ?
கள்ளச் சிரிப்புடன் அவள் வினவி,

கன்னமும் சிவந்ததோ
கண்ணுடன் இணைந்து,
கண்இமை சிமிட்டி கேட்டவளோ
காற்றாய் விரைந்தாளே
கற்பனைகளை தூண்டி விட்டு.

கடுகியோடும் எண்ணங்களுடன்
கணம் ஒன்றில் புன்னகைத்தேன்
காட்சிகளை நேரில் பார்த்தது போல்
கலகலத்த அவள் செயலால்.


-தவப்புதல்வன்.

Friday, December 17, 2010

மூழ்கி கிடக்கிறேன் உன்னுடன்






கவிதைகளின் சங்கமத்தில்
மூழ்கியே கிடக்கிறேன்.

கவிஞனாய் நான்
கனவுகளில் மிதக்கிறேன்.

தாயவளாய் நினைக்கையில்
தாள் பணிந்து நிற்கிறேன்.

மங்கையாய் பார்க்கும் போது
மகிழ்ச்சியில் குதிக்கிறேன்.

காதலியாய் நினைக்கும் போது
கொஞ்சி குழாவி மயங்குகிறேன்.

வாழ்க்கைத்துணையாய் நினைக்கையில்
வாரியணைத்து இசைக்கின்றேன்.

குழந்தையாய் கருதையிலே
கும்மாளமிட்டு ஆடுகிறேன்.

கடவுளாய் பார்க்கும் போது
கற்பூரமாய் எரிகிறேன்.

தமிழுடன் கலக்கவே
தவமதைப் புரிகிறேன்.

கண்கட்டு வித்தையாய்
கவிதைகளைப் படைக்கவே,

கலைரசத்தை ஊட்டிவிடு
களைப்பின்றி இருக்கவே.

Saturday, December 11, 2010

தாயுமானவன்



சுமக்கத்தான் விரும்புகிறேன் கருவிலே,
வளக்கவே விரும்புகிறேன் கவிதைகளாய்.

தாயெனப் பேரெடுக்க
தவமிருந்தேன் கருக் கொள்ள,

ஏனோ கருக் கொள்ளும் வேகத்தில்
கலைந்துத்தான் போகின்றீர்.

கதறியே துடிக்கின்றேன்
உமை கருக் கொள்ளமுடியாமல்.

அளவற்ற வாரிசுகளாய்
பிறந்து நீங்கள்,

அள்ளியே தருவீரோ
வளர்க்கும் வாய்ப்புதனை.

தாயுமானவன் இவனென
பேரெடுக்கச் செய்வீரோ.

-தவப்புதல்வன்


திறந்து பாருங்கள். உணர்வதை பதியுங்கள்.
http://aambalmalar.blogspot.com

Thursday, December 9, 2010

என்று மாறுமோ இந்நிலை?


உழைத்தானே 100 கூலி பெற்றிடவே

70ஐக் கொடுத்தானே கால்மதுவைப் வாங்கிடவே

உடன் கொரித்தான் 20ஐ செலவழித்து

தட்டெடுத்த சிறுவனுக்கு 10ம் கொடுத்தான்

பாசமுள்ள வள்ளலைப் போல்.


தன்னிலை மறந்தவனாய்

தள்ளாடி நடந்தானே

தன் வெறும் கையை வீசிக் கொண்டு.

தரங்கெட்ட அவன் செயலால்,

தகிக்கின்ற வயிறோடு,

தந்தை வருகைப் பார்த்திருந்த

தவமிருந்து பெற்றத்

தன் குழந்தைகளின் பசியாற்ற

தண்ணிரை கொடுத்தணைத்திடவே

தாங்கொண்ண துயரத்துடன்

தாயவள் எழுந்தாளே துடித்தப்படி.

பின் குறிப்பு:-
இதற்கேற்ற சரியான இந்திய தமிழ்நாட்டின் குடிமகன் புகைப்படம் கிடைக்கவில்லை.

Wednesday, December 8, 2010

கண் காண இடத்தில்..

காற்றிலே வந்த மணம்

உன் அழகைச் சொன்னது.

தூரிகையை எடுக்கவில்லை,

வரைப்பலகைத் தேடவில்லை,

மனமே வரைந்தது.

மகிழ்ச்சியில் திளைத்தது.

தித்திக்கும் கற்கண்டாய்,

திவளைகளாய் மேல் தெளிக்க,

திணறித்தான் போகின்றேன்,

திளைக்கும் உம் மகிழ்வாலே.

இறைவா............


ஏன் இதைப் படைத்தாய்

என்றேன கேட்பேன்

என் உறுப்புகள்

வலியால் துடிக்கும் போது.


ஏன் எனைப் படைத்தாய்

என்றென கேட்பேன்

எனை துயரங்கள்

வெகுவாய் சூழும்போதே.

Monday, December 6, 2010

இன்புற்றிருக்க


இல்லோரை வழி நடத்த
இல்லறத்துப் பாலிருக்க.

அறவோரை ஆற்றி வைக்க
அறத்துப் பாலிருக்க.

காமுகரை வழித்திருப்ப
காமத்துப் பாலிருக்க.

யாமும் மகிழ்ந்திருக்க
பல்வகைப் பாலிருக்க.

நீரும் தூய்த்திருக்க
துணைக்கழைக்கும் பாலெதுவோ?

Thursday, September 9, 2010

கண்தானம்


நேற்றைக்கு முன்தினம் செப்டம்பர் மாதம் 7 ந் தேதி உலக கண்தான விழிப்புணர்வு நாள். அன்று தவற விட்டுவிட்டேன் பதிவிட. இன்று அது உங்களுக்காக.

விழிகளால் காண்வதை
விவரித்துக் கொண்டிருந்தான்
விழியிழந்த நண்பனுக்கு.
விதவிதமான ஏக்கங்களுடன்
விடியல்களைக் காண துடித்துக் கொண்டிருந்தான்.
விடியல் வந்தது அவனுக்கும்
விதியால் மதியிழந்து
வின்னையடைந்தவனின் விழி.

பின்குறிப்பு:- அடிபட்டு இறப்பவர்களின் விழிகள் மட்டுமல்ல, யார் உயிர் நீத்தாலும் அவர்களுடைய விழிகளை தானமாக கொடுங்கள்.

Sunday, August 22, 2010

சுதந்திரத்தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். - 2010
உத்வேகம் கொண்டு நாம
உறுதியினை எடுத்திடுவோம்.
இந்திய திருநாட்டின்
இறையாண்மை காத்திடுவோம்.
வெற்றி மீது வெற்றியென்றே
விரைவினிலே காட்டிடுவோம்.
ஒற்றுமையாய் கரம் கோர்த்து
ஒன்றுபட்டு முடித்திடுவோம்.
அரியபல செயல் புரிந்து
பெற்று தந்த பாரதத்தை,
பொன் போல பாதுகாத்து
உழைப்பாலே உயர்த்திடுவோம்.
தூய்மை தூய்மை
என்று சொல்லி கதறுகிறோம்.
தூய்மையை தொடங்கி வைக்க
ஏனோ நாம் தயங்குகிறோம்.
சுதந்திரம் சுதந்திரம் என்போம்
அதை பேணி காத்து நடப்போம்.
உரிமை உரிமை என்போம்
கடமையை உணர்ந்துக் கொள்வோம்.
சாதிகளில் வேறுபாட்டை
சுத்தமாய் அகற்றிடுவோம்.
ஒன்றுபட்ட இந்தியராய்
ஓங்காரம் புரிந்திடுவோம்.
செதில்களாய் அரிக்கின்ற
உடன் இருக்கும் கிருமிகளை,
தயங்காமல் அழித்திடுவோம்
அறுவை சிகிச்சை என்றாலும்
அதை நாம் அகற்றிடுவோம்,
பாரத அன்னைக்கு
புகழ் மகுடம் சூடிடுவோம்.
உலகமே வியக்கும் வண்ணம்
புகழடைய செய்திடுவோம்.
ஓங்கு புகழ் ஓங்கவே
இனிய இத்திரு நாளிலே,
சூளுரைத்துக் கொள்வோமே.
உறுதியாய் செய்வோமே.
-தவப்புதல்வன்
99414 76945

Thursday, June 3, 2010

ஜோதிமணிக்கு திருமண வாழ்த்து.


நண்பி ஜோதிமணிக்கு இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. அவருக்கான திருமண வாழ்த்து.

மங்கள நான் பூட்ட,
மணவாழ்க்கை புவி சிறக்க,
மாசில்லா மனங்களெல்லாம்,
மலர் தூவி வாழ்த்தட்டும்.

இல்வாழ்க்கைத் துணைவியாய்
மாறுகின்ற உன் வாழ்க்கை,
மறக்கவியலா மகிழ்வுக
ளாய்
வாழ்விலே நிலைக்கட்டும்.

அன்பினால் நவின்ற வார்த்தை
ஆனந்தத்தை நல்கட்டும்.
தேவர்களின் ஆசியால்
ஜோதியாய் ஒளிரட்டும்.
மணியாய் ஒலிக்கட்டும்.

இணையும் மனங்கள் இரண்டுமே
ஒரு மனமாய் இயங்கட்டும்.
இன்று போல் என்றுமே
இனிய வாழ்வாய் இருக்கட்டும்.

பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூறாண்டு
பேறுகள் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்று,
அன்புடன் வாழ்த்தும்.

Uncle,

A.M.பத்ரி நாராயணன்.


பின் குறிப்பு:
மேலே உள்ள புகைப்படம் அவர்களுடையது அல்ல.

Friday, May 21, 2010

கொடுத்து விட்டாய் என்னிடமே.

சிந்தனையில் சிதறியது
அத்தனையும் உனதென்று
அள்ளித்தான் கொடுத்தேனே
அழகாக சீர்படுத்தி
முறையாக அதை அடுக்கி
முன்வைத்தேன் உன் காலடியில்

கொண்டாட வருவோருடன்
கொலுவிலே வைத்திருந்து
கொண்டாடி மகிழு என்று
கொடுத்து விட்டாய் என்னிடமே.

ஓ .... நிலா, இரு நிலா, இருளிலா!!!!


எட்டாத உயரத்தில் ஓர் நிலா,

நதியலையில்

தொட்டாலும் கிடைக்காத ஓர் நிலா.
நதிக்கரையில் ஓர் நிலா.
அவள் முகமோ ஓர் நிலா.
அவள் பெயரும் ஓர் நிலா.

ஒளியை பொழியும் அந்த நிலா,
மலராய் மலரும் இந்த நிலா.
மறையும், தேயும் அந்த
நிலா,
மங்கா தங்கமிது இந்த
நிலா.
கவிஞரின் கவிதைக்கு அந்த
நிலா,
காதலனின் காதலுக்கு இந்த
நிலா.

தொட்டாலும் சிவக்காத அந்த
நிலா,
சொல் கேட்டாலே
முகம் சிவக்கும் இந்த
நிலா.
எல்லோருக்கும் சொந்தமது அந்த
நிலா,
எனக்கு மட்டும் சொந்தமிது இந்த நிலா.