Translate

Showing posts with label அன்பிலே நீ. Show all posts
Showing posts with label அன்பிலே நீ. Show all posts

Monday, October 16, 2017

அன்பிலே நீ


பூத்திருந்த விழிகளுக்கு பன்னீரை நீ தெளித்தாய். 
பனிமலராய் பூத்திருக்க தண்ணீரை நீயிறைத்தாய். 
மலர் தேடி அலையும்போது, 
வழியில் வந்து தேடிக் கொடுத்தாய். 
மகிழ்வுடன் மாலையை நான் கோர்க்க, 
பக்கத்திலிருந்து தட்டிக் கொடுத்தாய்.
வண்ணமலர்கள் மாலையில் நிறைந்திருக்க,
வாசமதை காற்றும் சுமந்து செல்ல,
நுகர்ந்த மக்கள் மகிழ்விலே திளைத்திருக்க,
விரைந்திட்டேன் மீண்டும் ஒன்றை கோர்த்திட. 


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.