Translate

Showing posts with label அஞ்சலி கவிதை. Show all posts
Showing posts with label அஞ்சலி கவிதை. Show all posts

Sunday, February 22, 2015

அஞ்சலி கவிதை - Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala), Sis/o கவிதாயினி. Vetha Langathilakam

விருப்பக்குறி இடுவேனோ,
உம் வேதனைக்கு
என்ன சொல்லி
மருந்திடுவேனோ...

ஆறா துயரமது
பெருவெள்ளமாய்
பெருக்கெடுக்க,
மீளா தூரமதில்
அவர் குடியிருப்போ
நீண்டிருக்க,

இணைந்தோமே உங்களுடன்
துயரத்தில் பங்கெடுக்க,
இறையிடம் பிரார்த்தித்தோம்
வேதனை வடுக்களை  களைந்துவிட.

#அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து,
பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது வருத்தத்தைப்  பகிர்ந்துக் கொள்கிறேன்.

தவப்புதல்வன்.
=====================================================================



என் உடல் நலம் கருதி நீண்ட பயணத்தாலான
உன் இறுதிக் கிரியைகளில் மனதார
இங்கிருந்து கலக்கிறேன்.
நாளை அக்கினியோடு சங்கமமாகிறது உன்னுடல்.
இரவும் பகலும், நாளும் பொழுதும் என்னோடு நீயம்மா!



கவிதாயினி.வேதா இலங்கத்திலகம் அவர்களின்  அழகு, அறிவு, திறமையான அன்புடை தங்கை Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala)  .

===============================================================================


Thursday, October 24, 2013

அஞ்சலி ...



வாழ்வின் கால ஓட்டத்திலே
சோதனைகளை  பல கடந்து,
வயது முதிர்ந்த நேரத்திலே
வேதனைகளை சுமந்தபடி,
இறைவனின் அருள் கிடைக்க
அவனடி புகுந்தார் நேற்று.
அவர் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம் உளம் உருக.

கையறு நிலையால்,
விழி கோர்த்த துளியுடன்,
இதோ நீர் கானா பூவளையம்
இன்று உமக்காக.




Monday, September 9, 2013

அன்னை தெரேசா (’Mother Teresa, - செப்டம்பர் 5, 1997) அஞ்சலி கவிதை





அன்னை தெரசா இன்னும் வாழ்கிறார் !

அன்னை தெர சாவுக்குச் சாவா ? இங்கே
ஆர் சொன்னார் ? அன்னையவள் பூமு கத்தின்
புன்னகைக்குச் சாவுண்டா ? சேவை தந்த
புகழுக்குச் சாவுண்டா ? கருணை சிந்தும்

இன்னமுத விழிகளுக்கும், இரண்டு கைகளுக்கும்
என்றேனும் சாவுண்டா ? எவர் சொன்னார்கள் ?
இன்னமதம், இன்னஇனம் என்றில் லாமல்
எல்லோர்க்கும் அன்னையவள் சாக மாட்டாள் !

மானிடர்க்குத் தொண்டு செய மண்ணில் வந்தாய் !
மாறாத சேவையினால்   கண்ணில் நின்றாய் !
கூனுடலும் குற்றுயிரும் நிமிர்ந்து நின்று
கும்பிட்டுக் கைதொழவே வாழ்வை வென்றாய் !

கானுளவும் வண்டெனவே தேடிக் தேடிக்
காலமெலாம் மானிடர்க்கே வாழ்ந்து கொஞ்சம்
வானுலகத் தேவர்க்கும் தொண்டு செய்ய
வழித்தேடிப் போயுள்ளாய் ! மறைந்தாய் இல்லை !

தேவைக்கே வாழாமல், தன்னைப் பெற்ற
தெருவுக்கே வாழ்ந்த மகள் தெரசாவிற்கு,
சேவைக்கே பிறந்திட்ட ஆத்தூர் மண்ணின்
சிறப்பான சுழற் சங்கம் (ரோட்டரி சங்கம் )
சிரம் தாழ்த்தி வணங்குகிறது !

இவண்
RTN.N.செல்வராஜ், தலைவர்.   
RTN.D.சீனிவாசன் , பொருளாளர்.
RTN.T.தர்மலிங்கம் , செயலாளர்.
மற்றும்  உறுப்பினர்கள்
ஆத்தூர் ரோட்டரி சங்கம்

** அன்னை தெரசா  மறைவையொட்டி, இந்த அஞ்சலி  கவிதையை, ஆத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள். தற்சமயம் எமது சகோதரி மூலம் கிடைக்கப் பெற்றோம். அவரின் 16ம் ஆண்டின் நினைவு நாளை ஒட்டி நினைவஞ்சலியாக மீண்டுமதை வெளியிட்டிருக்கிறோம்.