Translate

Showing posts with label என்னவளாய் ஆவாயோ?. Show all posts
Showing posts with label என்னவளாய் ஆவாயோ?. Show all posts

Thursday, November 30, 2017

என்னவளாய் ஆவாயோ?





எதையோ நீ பார்க்கின்றாய்.

என் விழியை ஈர்த்து விட்டாய்
எத்தனையோ காட்சிகள்
எதையென தேடுகிறேன்.

மீட்கவே பார்க்கின்றேன்
மீண்டும் மீண்டும் உனை கண்டு.
மீனாய் துள்ளும் உன் விழிகள்
மீண்டதே ஒரு வழியாய் அதிலிருந்து.

உன்னிடம் பகிர்ந்து கொண்டு
உன்னுடன் சேர்ந்திசைக்க
உருகும் என் நெஞ்சத்தை
உணர்வாயோ நீயுமதை.

எத்தனையோ எண்ணங்கள்
என்னுள்ளே உருண்டோட,
செல்லுகின்ற பேருந்துடன்
விரைவாய் காலம் கரைகிறது.

எப்பிறவி தொடர்பென
எண்ணி நான் மலைக்கின்றேன்.
ஏக்கத்தில் நான் துடிக்க,
ஏறிட்டு பார்ப்பாயோ? 

எங்கிருந்தாலும் வாழ்கவென
ஏங்கவிட்டு செல்வாயோ?
ஏதொன்றும் அறியாதவளாய்
இறங்கி நீ செல்வாயோ?


--
ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்
29\11\2017
#முதல் பரிசு பெற்ற கவிதை