Translate

Showing posts with label குழந்தை பிறப்புக்கு வாழ்த்து. Show all posts
Showing posts with label குழந்தை பிறப்புக்கு வாழ்த்து. Show all posts

Wednesday, April 1, 2015

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து



புதிதாய் பூத்த மலரிது
அழகு ரோஜா இதுவது
சாதனைக்கு உரு கொடுக்க
சாதனாவாக உருவெடுத்தாள்
தாயின் கருவறையில்
தனி இராஜ்ஜியம் கண்டயிவளோ,
உறவுகளை சோதித்தாள்
உள்ளிருப்பு நடத்தி.
வெற்றிப்பார்வை  படரவிட்டாள்
வெளியுலகைக் கண்டவுடன்.
நகலெடுத்த பிறப்பாக
நறுமணப் பொருளாக
ஒளி வீசும் விழிகளுடன்
ஒப்பற்ற பூமியிலே
அவதரித்தாள்
மென்பஞ்சு குவியலாக.


#சென்ற 2011ல் பேத்தி பிறந்தபோது எழுதியதுயிது 

Thursday, November 13, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து - Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh




Ramesh Periyasamy & ‎Bhuvana Ramesh

காணக்கோடி பலயிருக்க,
கண்டு நீயும் மகிழ்ந்திருக்க,
கருவறையில் காத்திருந்து 
காண வந்தாயோ கனவுலகை நீ.

பார்த்திட்ட உடனே 
பண்பலையாய் நீ.
பரவசத்தில் நாங்கள் 
பார்த்ததும் உன்னை.

உன்னினிய ஒலிகளுக்கு 
உருவமில்லை எந்நாளும்.
உருபோட பார்த்தோமே 
உச்சரிக்கும் உன் ஒலிகளையே.

வளர்ந்திட வேண்டும் 
நலமுடன் நீ.
வாழ்த்திட வந்தோம் 
மகிழ்வுடன் நாங்கள். 



--
இப்படிக்கு
Uncle.A.M.பத்ரி நாராயணன்.

Aunty.& Family

Thursday, September 11, 2014

குழந்தை பிறப்புக்கு வாழ்த்து. - ஸ்ரீலதா காமேஷ் பாபு சக்ரவர்த்தி



ஸ்ரீலதா காமேஷ் பாபு சக்ரவர்த்தி 


கொஞ்சி குலவ, 
குவலயம் மகிழ,
வான்முகிழ் போலே,
வந்திவன்  உதிக்க.

ஏந்திய கைகளோ 
துளியாய்  மாற,
விரிந்த இதழ்களில் 
புன்னகை தவழ,

மார்போடணைத்து 
ஊட்டும் உதிரம்,
வையகம் போற்ற 
வாழ வைக்கும்.

கனவு கண்ட 
கருவறை சுமைகள்,
காற்றிலே கரைந்து 
உருவாய் பிறக்க,

மகிழ்வுகள் யாவும் 
முகங்களில் அனைத்தும்.
ஓடி வந்து 
ஒட்டிக் கொள்ளும் 


வாழ்த்தினோம் இன்று 
குலமது செழிக்க,
இறைவன் அருளால் - நலமாய் 
ஈன்றதை அடுத்து.


ஸ்ரீலதா உனக்கு 
எங்கள் நல்லாசிகள்,
அப்பா அம்மா.
Uncle and Aunt