Translate

Showing posts with label பேரன் "சுப்ரீத்"க்கு வாழ்த்து. Show all posts
Showing posts with label பேரன் "சுப்ரீத்"க்கு வாழ்த்து. Show all posts

Tuesday, February 8, 2011

பேரன் "சுப்ரீத்"க்கு வாழ்த்து


மறையாத நினைவுகளாய்
மகிழ்வுகள் நிறைந்திருக்க,

சொல்லுகின்ற சொற்களெல்லாம்
வேதங்களாய் பிறப்பெடுக்க,

உழைக்கின்ற உழைப்பெல்லாம்
உயர்வையே உமக்களிக்க,

உனை நாடும் உறவெல்லாம்
உன்னாலே மகிழ்வடைய,

தேடி வரும் புகழெல்லாம்
தேன் போல் இனித்திருக்க,

என்றுமே நீ
வாழ்விலே சிறந்திருக்க,

என்றென்றும் நிலையாக
வாழ்த்துக்கள் உமக்கிருக்க,

வாழ்த்தினோம் உனையே
சந்தித்த இனிய பொழுதினிலே.


பின் குறிப்பு:- எமது சகோதரி சுபாஷிணி நாராயணன் அவர்களின் மகன் வழி பேரனுக்கு, 03/02/2011 ஆம் தேதி கோயமுத்தூரில் யான் தங்கிருந்தபோது வாழ்த்தி எழுதியது.