Translate

Showing posts with label இதுவொரு மயக்கம். Show all posts
Showing posts with label இதுவொரு மயக்கம். Show all posts

Thursday, July 16, 2015

இதுவொரு மயக்கம்

செடி தந்த, பூத்த பூவிலே
உன் முகம் கண்டேன்.
அதுவிருக்கும் நிலையிலே,
நீ நிற்கும் நிலைக்கண்டேன்.
தலை கவிழ்ந்த பூவிலே - உன் 
வெட்கச்சாயல் நான் கண்டேன்.
மலர் தந்த நிறத்தில் - உன் 
வதனத்தின் நிறம் கண்டேன்.
காற்றாட கடந்த போது - நீ
அழைப்பதாய் நெருங்கி சென்றேன் 
என்னிலே நீயிருக்க,
பூவிலே உனைக் கண்டு,
மயங்கிய எனைக் கண்டு, - நீ 
நகைப்பதாய் நினைத்துக் கொண்டேன். 😍😊😊