Translate

Showing posts with label நிழலாய் நிந்திக்காதே. Show all posts
Showing posts with label நிழலாய் நிந்திக்காதே. Show all posts

Sunday, July 22, 2018

நிழலாய் நிந்திக்காதே!






💐 💐 💐" வாலி சான்றிதழ் ( 1 )" 💐 💐 💐
+++++++++++++++++++++++++++++++++++++++

🌷நிழலாய் நிந்திக்காதே! 🌷
👑
+++++++++++++++++++++++++++

தவறிழைத்ததோ ஒரு முறையெனினும்
தொடர்ந்து என்னை நிந்திக்கிறாயே
நிழலாய் தொடரும் மனசாட்சியே. 9

கனவிலும் நினைக்கவில்லை.
கண்டதும்
மாற்றம் என்னில்
உண்டாகி குலைக்குமென. 16

கற்ற படங்களுக்கு கணக்கில்லை.
கற்றிருந்தும் தவறிழைத்தது முறையில்லை.
காயங்கள் எனக்குள் பெரிதாக,
உடனிருந்து சுடுகிறாயே எந்நேரமும். 28

முடிவின்றி தொடருகிறதே
என்று இது முடியுமோ?
முடிவின்றி தொடருமோ?
மடியும் போதுதான் முடியுமோ? 38

மதியிழந்த அக்கணங்கள்
மறக்கவியலா நிதர்சனங்கள்
ஆறாமையில் தவிக்கின்றேன்
ஆறுதலுக்குத் துடிக்கின்றேன்.
உறக்கமும் தொலைத்து நான்,
உருகுலைந்து போகின்றேன். 51

பணிகளிலும் நாட்டமில்லை.
பகிர்ந்துக் கொள்ள யாருமில்லை.
புரிந்துக் கொள்வாரோ என் நிலையை?
ஏளனமாய் தூற்றி விட்டால்
வாழ்வின் முடிவுக்கே சென்று விடுவேன். 67

தண்டனை அனுபவிக்கத்தான் நினைக்கின்றேன்.
ஆனாலும்
இது அதிகமென நினைக்கின்றேன்.
தவறுகள் இழைப்போருக்கு
தண்டனைகள் என்றும் தேவை.
அதை உணர்ந்து நானும் இருக்கின்றேன். 83

இருந்தாலும் இதை அதிகமென கருதுகிறேன்.
நிழலாய் நிந்திக்காதே தொடர்ந்து என்னை. 91

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏