Translate

Showing posts with label காதலே காதலை வாழவிடு. Show all posts
Showing posts with label காதலே காதலை வாழவிடு. Show all posts

Tuesday, July 3, 2018

காதலே காதலை வாழவிடு




காதலே காதலை வாழவிடு
++++++++++++++++++++++++

காதல் காதலென சுற்றுகிறாய்
காதல் எனது உயிரென உளறுகிறாய்.
கனவிலும் அதையே பிதற்றுகிறாய்
கவியென
சொற்களை வாரி இறைக்கின்றாய். 14

காலம் நேரம் பாராமல்
கவனமாய் அவளைச் சுற்றுகின்றாய்.
கணநேரமும் விடாமல் துரத்துகிறாய்
கன்னியவள் நிலையை அறியாமல். 26

காதலையவள் ஏற்காமல்
கண்டிப்பு உன்னிடம் காட்டுகையில்,
கண்கள் சிவந்து போகின்றாய்.
காதலோ ஒரு தலையாய் ஆனதினால்,
கண்மூடி செயலில் இறங்குகிறாய். 39

காதலுக்குப் பொருளின்றி
கண்ணீர் சிந்தும் நிலையாக்க
கன்னிவளைச் சிதைக்கின்றாய். 46

காரித் துப்பும் நிலையடைந்து,
கடும் சிறையிலும் வாடுகிறாய்.
கனவானாய் நீயிருந்து
கண்ணியமாய் காதலை வாழவிடு. 57

✍️✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏🙏