Translate

Showing posts with label பொங்கல் நல்வாழ்த்து. Show all posts
Showing posts with label பொங்கல் நல்வாழ்த்து. Show all posts

Sunday, January 9, 2011

இனியப் பொங்கல் நல்வாழ்த்து - 2011


மனமென்பது ஒன்றானது அல்ல.
மாறுப்பட்ட எண்ணங்களை கொண்டததை
தீதில்லா வழியிலே இயக்கி
தீந்தமிழ் சொல்லில் நினைப்பதைப் புனைந்து
வண்ணப்பூக்களாய் வனமெங்கும் மலர
வண்ணக்கோளங்களாய் நிலமெங்கும் வரைய
வானில் காட்டும் வர்ணஜாலம்
வானவில்லாய் அதுவும் மிளிர,
பரிதியுடன் இணைந்தே
பூக்க செய்தது மழையின் சாரல்..

ஜாலங்கலில்லா வாழ்க்கையில்லை
ஜாலம் மட்டுமே வாழ்க்கையுமில்லை.
வெற்றி நோக்கி செல்லும் பாதை
என்றுமே சுகமாய் இருப்பதில்லை
திட்டமிட்ட உழைப்பே, ஈயும் வெற்றி.
நன்றே யாவரும் முனைந்து செய்க
தானே அடையும் புகழும் உமையே.
என்றன சொல்லி வாழ்த்தினேன் உம்மை
இனிய பொங்கல் திருநாளில் யாமும்