Translate

Showing posts with label அன்றும் இன்றும் அதே அதே. Show all posts
Showing posts with label அன்றும் இன்றும் அதே அதே. Show all posts

Wednesday, September 20, 2017

அன்றும் இன்றும் அதே அதே


பற்றியெரியும் வயிற்றுடனே 
பெற்ற மனங்கள் துடிக்குதடா.
பச்சையிலை முதிருமுன்னே 
பாவியவள் பறத்து விட்டாள்.
கனவு கண்ட அவளுடனே 
கலைந்து அதுவும் கரைந்ததடா.
முழு சேலை முடிச்சு  இறுக்க 
மொத்தமாய் அடங்கி விட்டாள்.

உறுதியை இழக்காதீர்
உமக்கிருக்கு வாழ்க்கையென 
வக்கனை பேசி திரிகிறார் 
பஞ்சமா பாதகர்கள்.
கபட வேடம் பூண்டவர்கள் 
 கடத்துகிறார் வாழ்வையவர் சுகமாக.

வேகுமோ அவருடலும் 
அரைஞாண் அறுத்த பின்னும்.
வெறி பிடித்த இனங்களாய் 
வேட்டையாடி அலைகின்றார். 
என்று முடியும் இவ்வேட்கை 
சிலிர்த்தெழுமோ பெண்ணினமும்.


-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.