Translate

Showing posts with label வாழ்க்கை ஓர் சரித்திரம். Show all posts
Showing posts with label வாழ்க்கை ஓர் சரித்திரம். Show all posts

Saturday, April 28, 2018

வாழ்க்கை ஓர் சரித்திரம்




நீக்கும் போக்குமாய்
நிறைந்தது நம் வாழ்க்கை.
நீங்காத நினைவுகள் நமக்குள்ளே. சில
நிசமாய் வாழ்கிறது இக்கருவிக்குள்ளே.  12

வாடாமலராய் வாழ்கின்றோம்
வாழ்ந்தது போதுமென்றா நினைக்கின்றோம்.
வளைக்குதே கரங்கள் நமதின்றும்
வாஞ்சையோடு அணைக்கிறது தோள்களிரண்டும்.  23

வயதான காலத்தில் என்னவிது என்போருக்கு,
வாசமலர் காதலை எப்படியுரைப்போம்?
கொடுத்தலும் பெறுதலும் இரண்டுமிருக்கும்,
எண்ணிலா உணர்வுகளை பகிர்ந்தளிக்கும்.  36

காதலே காமமென்றார்.
காமமே போதுமென்றார்.
கட்டிலின் தேவைக்காய்
கல்யாண உறவென்றார்.  44

அப்படியொரு கருத்தில்
அமைகின்ற வாழ்வெல்லாம்,
அடிப்படையே சேதமாகி
அழிந்து போகிறது விரைவாக.  53

ஆழ்து நீங்கள் சிந்தித்தால்
அதுவல்ல வாழ்க்கையென
அழகாக எடுத்துரைக்கும்
ஆனந்தமான வாழ்விருக்கும். 62

புரிதல்கள் நிறைவாக,
விட்டுக் கொடுத்தல் அதிகமாக,
ஒருவருக்கொருவர் நேசமாக,
வாழும் நாட்களில் நிசமாக
வாழ்ந்து பாருங்கள் பாசமாக
இணையாய் வாழ்வீர் நெடுங்காலமாக.



ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.