Translate

Showing posts with label எங்கிருக்கு?. Show all posts
Showing posts with label எங்கிருக்கு?. Show all posts

Monday, August 11, 2014

எங்கிருக்கு?



அறியாத ஊருக்கு 
வழியொன்றைக் கண்டிடவே,
வருவோரை போவோரை 
வழி மறித்து கேட்கின்றேன்.
வந்தவரெல்லாம் மொழியின்றி தவிக்கின்றார்,
செல்பவரெல்லாம் வாய் மூடி செல்கின்றார்.
நானும் ஒரு நாள் அடைந்திடுவேன் 
அன்று கூறிட முயல்கின்றேன்.
தெரிந்தால் நீங்களும் கூறிடுங்கள் 
சரியாய் நானும் சேர்ந்திடவே.