
கையிக்குமினி எட்டவில்லை,
கவிஞனென பெயரெடுக்க.
கண்ணயரும் நேரத்திலும்
கற்பனைகளாய் தோன்றுவதை
கவிதையாய் யான் நினைத்து
கரிய எழுத்தில் அத்தனையும்
காகித்ததில் பதித்து வைப்பேன்.
கட்டி வைத்த காகிதமெல்லாம்
கைப்படா நிலையாலே
கல்லறையில் உறங்குவது போல்
களையிழந்து கிடக்குதம்மா.