வார்த்தைகள் ஓடி வர
எண்ணங்களில் மிதந்து வர
வண்ணங்களை பூசிக் கொள்ள
வானவில்லாய் தோன்றுமதை
செந்தமிழில் நிலைத்து நிற்க
வரிவடிவம் கொடுத்து வைத்தேன்.
இனியத்தமிழில் வாயினிக்க
என்றென்றும் நிலைத்து நிற்க
சுவையாக நீங்கள் அருந்த
இதமாக நான் தருவேன்.
மனத்திலே சுவையிருக்க
நினைவிலே தானிருக்க
மகிழ்விலே தானினிக்க
தீந்தமிழ் சொல்லாலே
எழுத்தோவியம் கையாலே
நான் கொடுப்பேன் உமக்காக!!
