Translate

Showing posts with label வாழ்த்து மடல். Show all posts
Showing posts with label வாழ்த்து மடல். Show all posts

Monday, October 6, 2014

பேத்தி சாதனா - வாழ்த்து மடல்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினம் அறிமுக அடி வைத்து  இன்று முதல் அறிமுகப்பள்ளிக்கு செல்லத் துவங்கி இருக்கும் எங்கள் பேத்தி சாதனாவுக்கான  வாழ்த்து மடல். பெரியவர்களான நீங்களும் வாழ்த்துங்கள், ஆசிர்வதியுங்கள்  நண்பர்களே....




கற்பிக்கும் ஆசிரியர் 
பெருமைப்பட வேண்டும்.
கற்பதில் சிறந்தவளென 
பெயர் எடுக்க வேண்டும்.- இன்று 
வைக்கப் போகும்  முதலடி 
வீறுகொண்டு தொடர வேண்டும்.
கடவுள் அருளால் 
கலைகளில் நீ சிறக்க வேண்டும்.
நற்பிள்ளையென புகழ் 
நாடி வர வேண்டும்.
உனை நினைத்து பெற்றோருடன் 
சுற்றமும் நட்பும் மகிழ வேண்டும்.  
வாழ்த்தினோம் இன்றுமை 
வாழ்விலே சிறக்க.

பாசமுடன் ஆசிர்வதிக்கும்,
தாத்தா, பாட்டி.