Translate

Showing posts with label கொசுவின் வாழ்த்து. Show all posts
Showing posts with label கொசுவின் வாழ்த்து. Show all posts

Wednesday, January 9, 2013

கொசுவின் வாழ்த்து.


கொசுவின் வாழ்த்து.

மின்விசையால் இயக்கி
காற்றை விசையாய் வீசும்
மின்விசிறிக்கும் பயமில்லை.

எம்மினத்தை அழிக்க
காற்றிலே பரப்பி, விரட்டும்
விரட்டிகளை கண்டும் அச்சமில்லை.


கொலைப் புரிகிறீர் மின்மட்டையால்
ஆனால் அழிக்க முடியாது எமை.
வீறுகொண்டு செயல் படுகிறோம்
விரைந்து முட்டைகளை இட்டு.


கழிவுநீர் தேங்கும் வரை,
சுகாதாரம் பேணா வரை
சாதனை படைக்க முடியாது
எமை முழுமையாய் ஒழித்து.
உமக்கோ ஒரு நாள்- அது
எமக்கோ வாழ் நாள்.


பிறவிக்காலம் முடியும் வரை
உறுஞ்சித்தானே வாழ வேண்டும்.
பாவப்பட்ட உமைக் கடித்து
பாவங்களை சுமக்கின்றோம்.

உறுஞ்சியே நாங்களும் பெறுகிடவே
நல்தேகத்துடன் வாழ்ந்திருக்க,
வாழ்த்துகிறோம் உங்களையே.
வாழியே பல்லாண்டு நல்ரத்தமுடனே!
நாங்களும் உங்களுடன் வாழ்ந்திடவே.