Translate

Showing posts with label உழவனுக்கோர் திருநாள். Show all posts
Showing posts with label உழவனுக்கோர் திருநாள். Show all posts

Friday, January 12, 2018

உழவனுக்கோர் திருநாள்



பொங்கலோ பொங்கலென பொங்குகின்ற பொங்கலில்,
புது வாழ்வு பிறக்குமென புதியதொரு நம்பிக்கையில்
புது பானையில் பொங்கலிட்டு, புத்தாடை அணிந்துக் கொண்டு,
இயற்கையை துதித்து விட்டு, முன்னோர்களுக்கு படையலிட்டு,
உழவுக்கு துணையிருக்கும் உயிரினங்களை அலங்கரித்து,
சுற்றங்கள் கூடி மகிழ
விருந்து படைக்கும் வியக்குதகு மனிதனிவன்.
உணவுண்டு நாம் வாழ,  உழைக்குமிந்த உழவனிவனை
வாழ்த்திடுவோம் இந்நாளில்.

அனைவருக்கும் இனிய உழவர் தின நல்வாழ்த்துகள்

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்