இரண்டாய் இருந்ததை
ஒன்றாய் ஆக்கிட,
மங்கள நாண் கொண்டு
மனங்களை இணைத்த
நினைவிலே ஆடும்
மணநாள் இன்றிது.
கலந்த மனங்கள்
காதலுடன் நாளும்
இனிமையாய் என்றும்
இளமையாய் தொடர,
ஊன்றிய விழுதுகள்
பசுமையாய் விளங்க,
பல்லாண்டு பல்லாண்டு
செழிப்பாய் திகழ,
அன்புடன் வாழ்த்தினோம்
ஆண்டவனை தொழுது யாம்.
வாழ்த்தும் உள்ளம்,
தவப்புதல்வன்
A.M.பத்ரிநாராயணன்




