Translate

Showing posts with label பரமபதம். Show all posts
Showing posts with label பரமபதம். Show all posts

Sunday, December 31, 2017

பரமபதம்



வாழ்க்கையெனும் பதையிலே
உந்துதலாய் மேலேற
வளர்த்தெடுக்கும் பெற்றோரும்,
அறிவுட்டும் ஆசிரியர்களும்,
தட்டிக் கொடுக்கும்
உடன்பிறப்பும், தோழமைகளும்
ஆங்காங்கே ஏணிகளாய்
வழியெங்கும் உடனிருக்க,

எத்தனையோ இடர்களெல்லாம்
கொடிய பல பாம்புகளாய்
பயணத்தின் முடிவுக்குள்ளே,
விழுங்கி நமை கீழ் தள்ள,

வெற்றியெனும் குறிக்கோளில்
முனைப்புடன் மூழ்கிருந்தால்,
குறுக்கு வழியில்லா சறுக்கள்கள்
எத்தனையோ வந்தாலும்.,
அடையலாம் முடிவினிலே
வெற்றியெனும் உயர்வினை நாம்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


பத்ரி நாராயணன். 🙏