Translate

Showing posts with label வாழ்க்கை ஏக்கங்கள். Show all posts
Showing posts with label வாழ்க்கை ஏக்கங்கள். Show all posts

Friday, May 29, 2015

வாழ்க்கை ஏக்கங்கள்



வாழ்க்கைப் பாடத்தில்
ஏமாற்றப் பள்ளங்கள்
அவள் மனத்தில் ஏராளம்.
 வாய் சுட்ட சொற்களால்
வடுக்களுடன் புண்களும்
அவன் மனத்திலும் ஏராளம்.

முடிச்சிட்ட அவனோ
முடிச்சவிழ்க்க தெரியாமல்
கலங்கியவனாய் துடிக்கிறான்
காலக் கூற்றினை எதிர்நோக்கி.

அறிய செய்யுமோ - அவள்
மனம் நிறைய, வழி காட்டி.
கரைந்து விட்ட காலத்தால்
பயனது இருக்குமோ?

ஏக்கத்தின் பிடிக்குள் - இரு 
உள்ளம் அல்லாட
புத்தூற்றாய் மகிழ்வு பொங்க
புது வழி பிறக்குமோ