ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
.
Show all posts
Showing posts with label
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
.
Show all posts
Wednesday, December 10, 2014
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
துவங்கிய இரவு
துரிதமாய் விடியட்டும்.
தூய்மையான நட்புடனும்
தூயவன் அருளோடும்
துலங்கட்டும் உறவுகள்.
இனிதாகட்டும் இந்நாளும் நண்பர்களே .
Saturday, November 22, 2014
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் - Paramasivam Udayakumar
Paramasivam Udayakumar
பாதைகளோ கடினமாக,
படிகளெல்லாம் உயரமாக,
பதறாமல் துணிவுடனே,
பகுத்தறிந்து நிலையாக
உச்சியை அடைந்திடவே
உமையே வாழ்த்தினோம்
மிக்க மகிழ்வுடனே.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
Saturday, November 1, 2014
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
பாச வலைகள் பின்னி,
பசுமையான நினைவுகளுடன்,
பறக்கட்டும் மனது,
பரந்த இவ்வானிலே.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..
Monday, October 20, 2014
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
சிலுசிலுப்பாய் விடியலோ துவங்க,
சிந்தனையில் ஆயிரம் நினைவுகள் இருக்க,
சீர்படுத்தி ஒன்றாய்
சித்திரம் வரைந்து,
சிறப்பான நாளாய்
இனிதாய் துவங்க
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.
Wednesday, September 24, 2014
நட்புகளே! - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
நட்புகளே!
பொல்லாத இதயமடா
பொறுக்கியாய் இருக்கிறதே - ஆம்
பொறுக்குகிறதே நல்லிதயத்தை.
பொறுக்கியது போதும்
பொன்னான நாளென
இயம்பும் நட்புகளுக்கு,
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
Friday, September 19, 2014
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
மாவிலைத் தோரணமாய்
பன்னீர் புஷ்பங்களாய்
இழையோடும் நூலிழையாய்
உறவுகள் இறுகி,
உற்சாகம் பொங்க,
மகிழ்வுகள் பெருகி,
நலன்கள் நடைப்பயில,
குதுகலம் கும்மாளமிட,
மாற்றங்கள் எய்தினும்
மாற பாசமுடன்
வாழ்கவே என்றும்.
வாழ்த்துகிறேன் இன்றும்.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.
Tuesday, September 16, 2014
நட்பும்,உறவும் - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
வானத்தைத் தொட வேண்டும்
வெண்முகில் போல.
அன்பினைப் பொழிய வேண்டும்
கரும்முகில் போல.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.
Wednesday, November 20, 2013
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
அறியாத வயதில்லை
புரியாததென நீ கூற.
ஒருவர் மட்டும்
காரணமில்லை,
என்று உணர்வாயோ
நீயும் தான் இதை.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.
Tuesday, November 19, 2013
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
ஆனந்த திருநடனம்
ஆடியது எம் மனத்தில்
அவனருள் தந்தானே
அணைத்துக் கொண்ட நட்புக்கு.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே!
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
ஒதுங்கிய ஓடமாய் நில்லாமல்
ஓடும் பயணமாய் இனித்திருக்க,
ஒருமுகப்படட்டும்
உம் செயல்களெல்லாம் .
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.
-தவப்புதல்வன்.
Sunday, November 17, 2013
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
நினைவுகளில் இருக்கும்
நிகழ்வுகள் யாவும்,
சந்திக்கும் நிலையில்
தாக்கம் தருமோ?
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே!
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
நாளின்று இனிதாக,
பிறந்ததோ உமக்காக,
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே
மகிழ்வாக கழிந்திடவே.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே!
Saturday, November 16, 2013
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்
வானத்திலிருந்து குதிப்பதில்லை,
உமக்கான வாழ்த்துக்கள்.
மனத்திலே பிறக்கிறது
நலமுடன் என்றுமே நீங்கள் வாழ.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.
Thursday, August 1, 2013
முகம்- குறுங்கவிதை. - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.
நிகழ்ந்த நிகழ்வுகள்
மனத்தினில் ஓட,
நொடிகளுக்கு இடையே
மாற்றம் கண்டது.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)