
கவிதைகளின் சங்கமத்தில்
மூழ்கியே கிடக்கிறேன்.
கவிஞனாய் நான்
கனவுகளில் மிதக்கிறேன்.
தாயவளாய் நினைக்கையில்
தாள் பணிந்து நிற்கிறேன்.
மங்கையாய் பார்க்கும் போது
மகிழ்ச்சியில் குதிக்கிறேன்.
காதலியாய் நினைக்கும் போது
கொஞ்சி குழாவி மயங்குகிறேன்.
வாழ்க்கைத்துணையாய் நினைக்கையில்
வாரியணைத்து இசைக்கின்றேன்.
குழந்தையாய் கருதையிலே
கும்மாளமிட்டு ஆடுகிறேன்.
கடவுளாய் பார்க்கும் போது
கற்பூரமாய் எரிகிறேன்.
தமிழுடன் கலக்கவே
தவமதைப் புரிகிறேன்.
கண்கட்டு வித்தையாய்
கவிதைகளைப் படைக்கவே,
கலைரசத்தை ஊட்டிவிடு
களைப்பின்றி இருக்கவே.