Translate

Showing posts with label போலியாய். Show all posts
Showing posts with label போலியாய். Show all posts

Saturday, October 14, 2017

போலியாய்




அகமின்றி முகம் பூத்தான்
அலங்கார உடையணிந்தான்
அவதாரம் தனதென்று
அருமையாய் உமைக் கவர்ந்தான்.
அகந்தையை உள் மறைத்து
அழகான மொழி பகர்ந்தான்.
அடக்கி அவன் வாழ்வதாய்
அளவற்ற கதையளந்தான்
ஆதரவாய் தனைக்காட்டி
அள்ளியவன் முடித்து விட்டான்.
அன்றுரைத்த கதைகளையே
அனுதினமும் சொல்லியவன்
அறிவிளியாய் உமை செய்து
அனைத்தையும் இழக்கச் செய்தான்.

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்