Translate

Showing posts with label நிரஞ்சனா பிறந்தநாள் வாழ்த்து 2009. Show all posts
Showing posts with label நிரஞ்சனா பிறந்தநாள் வாழ்த்து 2009. Show all posts

Tuesday, July 14, 2009

வெற்றியென சொல்லட்டும் !!!

பிறந்தநாள் வாழ்த்து - 2009
நிரஞ்சனாவுக்கு.

செய்கின்ற செயல்களெல்லாம்
செம்மையாய் துலங்கட்டும்.
வைக்கின்ற அடிகளெல்லாம்
வெற்றியென சொல்லட்டும்.
பேரும் புகழும்
பட்டொளி வீசட்டும்.
ஏக்கங்களெல்லாம்
தெலைந்தே போகட்டும்.
பிறந்த இந்நாள் முதலே
மனம் நிறைவாய் இருக்கட்டும்.
மனத்திலுள்ள வாழ்த்துகளெல்லாம்
வார்த்தைகளில் இல்லையம்மா.
சுமைகளாய் இருப்பது
உம்மை விட்டு அகல,
விருப்பங்கள் எல்லாம்
விரைந்தே அடைய,
வினையறுக்கும் இறைவன்
வரங்களை அருள,
கருணை கண்களை
உனை நோக்கி திருப்ப,
வேண்டியிருப்போம்
இறைவனை யாமே.

வாழ்த்துகளை பகரும்,
அப்பா,அம்மா,
தங்கை ஷோபனா.

பின்குறிப்பு: மிகவும் காலதாமதமாக இதில் பதிவு போடப்பட்டுள்ளது.