பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பாலுடன் பச்சரிசி
உலைக் கொதிக்க,
உருக்கு நெய்
அத்துடன் செர்ந்துருக,
முந்திரியும் திரட்சையும்
வெல்லமுடன் சேர்ந்தணைக்க,
ஏலத்தின் மணமோ
எட்டுதிக்கும் புகழ் பரப்ப,
நாசி வழி உள்னுழைந்து
வாய் வழியே நீரூற,
சப்புக் கொட்டியதே
நாவுடன் மனமும் தான்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-தவப்புதல்வன்
13/01/2013
