Translate

Showing posts with label நினைவுகளில் ஓரிரண்டு. Show all posts
Showing posts with label நினைவுகளில் ஓரிரண்டு. Show all posts

Wednesday, August 1, 2018

நினைவுகளில் ஓரிரண்டு…







நினைவுகளில் ஓரிரண்டு….
++++++++++++++++++++++++

யானை சவாரி நான் செய்ய,
முழந்தாளிட்டு நீங்கள் நடந்தீர்.
முதுகிலே தொங்கும் போது
உப்பாக எனைக் கூறி,
கூவிக்கூவி நீர் விற்றீர்.
போட்டிப் போட்டு அனைவரும்
கை நீட்டி விலைக் கேட்க,
இல்லாத விலைக் கூறி,
அவர்களை அசர வைத்தீர். 29

உம் தோளுக்கு இணையாய்
வளர்ந்து விட்டேன்.
முதுமையை நீரும் அடைந்து விட்டீர்.
எம் தோளில் சுமக்க முடியவில்லை
கைப்பிடித்து அழைத்து செல்ல சக்தியில்லை.
மாற்றம் நான் அடைந்திருந்தேன்
மாற்றுத்திறனாளியாய் நானிருந்தேன்.
மறக்காமல் சொல்லி விட்டீர்,
மறுநாள் நீர் இல்லையென்று.
புரியாமல் இருந்து விட்டேன்
புரிந்தபோது திகைத்து விட்டேன். 😶😢 63

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏