Translate

Showing posts with label துரோகம். Show all posts
Showing posts with label துரோகம். Show all posts

Saturday, January 27, 2018

வாக்கு துரோகம்



முன்பின் பார்த்ததில்லை.
முறையிட்டு நீயழுதாய்.
மூச்சு போகும் நிலையங்கு
மூவ்வாயிரம் காக்குமென்றாய்.

முழுதாக நான் கொடுக்க,
மூன்றே நாளில் திரும்புமென்றாய்.
மூன்று மாதம் கழிந்த பின்னும்
முனையளவும் திரும்பவில்லை.

இப்படியொரு நிலையிலே
இங்கு வாக்கு கேட்டு சிலரும் வந்தார்.
இருப்பெல்லாம் உயருமக்கு
இருப்பையெல்லாம் மாற்றிடுவேன்

கூறி அவர் பெற்றுச் சென்றார்.
கூட்டம் சேர்த்து ஓட்டுகளை.
கூட்டிப் பெறுக்க ஆட்களின்றி
கூடியதோ குப்பைகள்தான்
துரோகங்கள் பலவிருக்கு
தூஊண்டிலிட்டால் தாங்காது.
துணைக்கு ஆட்களிருந்தாலும்

தூக்கிவர முடியாது.

காதல் துரோகம்


வகுத்திருந்த என் வாழ்வை
வதைத்து விட்டாய் உன் செயலால்
வலிய வந்தாய் என் வழியில்
வாலிபத்தை வலையிட்டாய்

ஊர் சுற்றி வந்தாலும் - நான்
பெண்களை சுற்றியதில்லை.
கேலிகளோ எங்களுக்குள்
கேட்பதற்கு ஆட்களின்றி.

மரத்தடியில் எங்கள் வாசம்
மாற செய்ததே உன் வாசம்.
மாறி வந்தேன் நட்பை மறந்து
மறந்து போனாய் காதல் செய்து.

தவிக்கவிட்டு போனதினால்
தனிமையில் நானுறைந்தேன்.
தேர்ந்தவளாய் நீயிருக்க

தேடி வர விரும்பவில்லை.

நட்பு துரோகம்


நட்பென தோளிலிட்டாய்
நல்லுறவென தலையசைத்தேன்.
நஞ்சுகளோ உன் மனத்தில்
நயவஞ்சகம் செயலனைத்தில்.

மூச்சுகளிலும் உள்ளுறைய,
மூழ்கினேன் உணராமல்.
முட்புதரான உன் நினைவுகள்
முனைகளோ வெகு கூர்மை.

திட்டங்களை நீ போட,
தீட்டும்போது நானினைப்பேன்
திறமை உனது பெரிதென்று – அறியவில்லை
தீண்டதகாத நட்பென்று.