Translate

Showing posts with label கடுமையான சட்டங்களிருந்தால். Show all posts
Showing posts with label கடுமையான சட்டங்களிருந்தால். Show all posts

Monday, March 5, 2018

கடுமையான சட்டங்களிருந்தால்



ஆடம்பர ஆசைகள் அளவின்றி
நச்சுகளாய் நெஞ்சங்களில் நிறைந்திருக்க,
எண்ணிலடங்கா தீமைகள்
நித்தமும் தொடர்கிறது.
\
பதைக்கின்றனர் மக்களவர்
கொடுமைகளின் வேகம் கண்டு.
வெளிவேடங்களில் மோகங்கொண்டு

அணிகின்ற அணிகலன்கள்
தாக்கத்தைத் தருகிறதே
ருசி கண்ட பூனைகளுக்கும்
அதன்றியும் பூனைகளுக்கும்
ஊரான் நெய்யில் உண்டு மகிழ.

காக்கும் கரங்களும் கைக்கோர்த்து ஊடுருவ
அதிகார அரவணைப்பும் உடனிருக்க
அச்சங்கள் நீர்த்து போக,
வேர்களில் வெண்ணீரூற்ற சட்டங்களுக்கும்
வழுவின்றி
அரங்கேறுகிறது கொடுமைகள் அன்றாடம்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏