Translate

Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Friday, October 6, 2017

பசி


பச்சிளம் செடியவள்
பசியால் துடித்துடிக்க,
பத்து மாதம் சுமந்தவளோ
பாவியாய் நிலை குலைய,
பற்றியெரியும் மனத்துடனே
பற்றிக் கொண்டாள் தலையதனை.
பக்குவமாய் புரிய வைக்க
பாழும் மனம் தடுமாற,
பச்சை தண்ணீரும் காய்ந்திருக்க,
பானையும் கவிழ்திருக்க,
படும் வேதனை மாளாமல்
பற்றிடவும் வழியின்றி
பாறையாய் சமைத்திருந்தாள்.

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.