Translate

Showing posts with label உயிர்ப்பிக்க.... Show all posts
Showing posts with label உயிர்ப்பிக்க.... Show all posts

Friday, January 5, 2018

உயிர்ப்பிக்க...







படக்கவிதை - 05\01\2017

உணவுக்காய் உடலிழந்து
உயிரற்ற தலைக்கண்டு
உண்மையதை உணராமல்
உறவாடும் குழந்தையைக் கண்டு,
உள்ளமது நெகிழ நானும்,
உரைந்தேனே சில கணங்கள்.

உணர்ந்த நிலையில்
உள்ளம் கனக்கிறது.
உருகும் நிலையடைந்து
உடலை நனைக்கிறது.
உள்ளம் நிறையவடைய
ஊணினை ருசித்தாய்.

உணவிட்ட கைகளுக்கு
உரிமையுடன் கையணைத்தாய்.
உயிர்களோ இறைப்படைப்பில்
உதிக்கிறது நாள் தோறும்.
உதிர்வததோ கூடுதலாய்
உண் புசிக்கும் நிலையாலே.

உற்றத்தோழனாய் இருந்ததை
உறக்கத்தில் இருப்பதாய்
உள்ளத்திலே கள்ளமின்றி
உருட்டினானோ அதன் தலையை,
ஊட்டினானோ பாலதற்கு
உணரா இக்குழந்தைக்கு
உணர செய்தலில் பயனென்ன?

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏