Translate

Showing posts with label இன்றொரு தகவல்.. Show all posts
Showing posts with label இன்றொரு தகவல்.. Show all posts

Wednesday, January 20, 2016

அட, போயா.. போயா.... – இன்றொரு தகவல்.


இந்த பொங்கல் திருநாளுக்கு முன், ஒரு தகவல் அல்லது புகார் என்றும் எடுத்துகொள்ளலாம். அது சம்மந்தமாக வட்டாச்சியரை (தாசில்தார்) சந்திக்க சென்றேன். தாசில்தார் அலுவலக கட்டடத்தின் கேட்டில் வழி மறித்துக்கொண்டு ஒருவர், வருவோரையெல்லாம் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டு, கட்டடத்தின் வெளியிலுள்ள அலுவலக அறைகளுக்கு துரத்திக் கொண்டு இருந்தார். அதேபோல் என்னையும் கேட்டு, இங்கேயே இருங்கள் என கூறி விட்டார்.
தாசில்தார் அறைக்கு செல்ல வேண்டுமென கேட்டதற்கு, வெளியில் வரும்போது உங்கள் கோரிக்கையை கூறுங்களேன அனுமதிக்க மறுத்து விட்டார். அமைச்சர்கள் அலுவலகங்களில் தான் இந்த கெடுபிடி என்றால், இங்கேயும் வந்துவிட்டதா இச்சீர்கேடு என நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். தாசில்தார் வெளியே வர, நான் ஐயாவென, அவர் கண்டுக்கொள்ளாமல் செல்ல, அவர் காருக்கு அருகில் மற்றொருவருடன் நின்று பேசும் சமயத்தில், எனது கோரிக்கையை கூற ஆரம்பிக்கும் முன்பாகவே, கணினியும் தோற்கும் வேகத்தில், அட, போயா.. போயா.... என்கிட்டே கிடையாது என கூறியபடியே சென்றுவிட்டார்.
பல அலுவலக அரசு பணியாளர்கள் கூடியிருந்த வெளி இடத்தில் நானொரு ஒரு குடிமகன், ஒரு மாற்றுத்திறனாளி என்ற நினைவுக்கூட தோன்றாமல்,  அத்தாசில்தார் நடந்துக் கொண்ட அவமரியாதையான அச்செயலால், ஒரு நிமிடம்  திகைத்து விட்டேன். அச்சூழ்நிலையில் அங்கிருந்த ஒரு அரசு பணியாளர், மனம் வெதும்பி, என்ன மனுஷன் அவர் என கூறிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தொடர்புக் கொள்ளுங்கள் என கூறி, தொலைப்பேசி எண் ஒன்று கொடுத்தார்.

அங்கு நடந்த கூத்தை என்ன சொல்ல? என் அழைப்பை ஏற்றவர், எடுத்த எடுப்பிலேயே யாரிடம் பேசுகிறீர்கள் தெரியுமாவென கேட்க, ( அன்பே வா திரைப்படத்தில், எம்.ஜி.யார் போனில் நாகேஷிடம் நான் யார் தெரியுமா என கேட்க, என்னய்யா போனில் படமா காட்டுறாங்க என நாகேஷ் சொல்வதை நினைத்துக் கொண்டு)  நானும் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேச வேண்டுமென கூற, அது நானில்லை என்றபடி, நான் அடுத்தது என்ன கூற அல்லது கேட்கிறேன் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் இணைப்பை துண்டித்து விட்டார். இவர்களை போன்றவர்களை என்வென்று கூற?  

Friday, November 22, 2013

இப்படியொரு வேஷம் - இன்றொரு தகவல்.



எந்தொரு அறிவிப்பு கொடுக்காமலும், அனுமதி கேட்காமலும், உரிமையுடையவர்கள் போல, 

அவர்களாகவே கேட்டை திறந்துக் கொண்டு வந்தனர் இருவர்  கேட் திறந்து வரும் சத்தம் 

கேட்டு, யாரோ உறவினர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது, அவர்கள் தானே முன்னறிவுப்பு 

 கொடுக்காமல் உள்நுழையக்க கூடியவர்களாக இருப்பார்களென நினைத்தப்படி, 

சோர்வினால் சிறிது  ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மனைவியை எழுப்பியபடி, வீட்டுக் 

கதவைத் திறந்தால்,   பிராமணர் உடுத்தும் அமைப்பில் பளீர் வெள்ளை நிறத்தில்  கரை 

போட்ட வேட்டியை கட்டி, மேல் வெற்றுடம்பில் அங்கவஸ்திரம் குறுக்கில் சுற்றி போட்டபடி, 

மத்திய தர வயதையுடைய இருவர், ஏதோ ஓமம் செய்ய வேண்டும் கூறி, இந்த ஒரு 

ரசிதுகளோ, நோட்டோ இல்லாமல் வசூலுக்கு வந்திருந்தார்கள்.

நினைவுகள் பின்னோக்கி ஓடியது. சில மாதங்களுக்கு முன்பும், இதே போல பட்டு வேட்டி, பட்டு

அங்கவஸ்திரம் அணிந்தபடி வயதில் மூத்தவர்கள்  இவர்கள் வந்திருந்தனர். அவர்களும் 

முன்னறிவுப்புக் கொடுக்காமல் கேட் திறந்து கொண்டு வந்தார்கள். கம்பிரத் தோற்றத்துடன் 

வயதிலும் முதிர்ந்தவர்களாய் இருந்ததால், அவர்களை அமர வைத்து, வந்த விஷயத்தை 

விசாரித்தோம், அவர்கள் ஏதோ யாகமோ, மோகமோ செய்யப்போவதாக கூறி, நன்கொடை 

கேட்டார்கள். யானும் ரூபாய் 50/= கொடுத்தோம். அவர்கள் 50/=ரூபாயில் யாகம் செய்ய 

முடியுமா என கூறியதும், என்னடா வம்புயிது என எண்ணியபடியே மேலும் 50/= ரூ கொடுத்தோம். 

அடுத்து அவர்கள் கூறிய வார்த்தைதான் எம்மை மிகவும் யோசிக்க வைத்தது. நாங்கள் இருவர் 

வந்திருக்கிறோம், இந்த 100/= ரூபாய் போதுமா? கடவுள் அடையாளம் சொன்னதால்தான் 

உங்களிடம் வந்தோமென கூறினார்கள். பெரியவர்களே எம்முடைய சக்திக்கு 

கொடுத்திருக்கிறேன், கடவுளுக்கும் எமைப் பற்றி தெரியுமென கூறி, வெளியே அனுப்பி 

வைத்தோம். உடனடியாக எதிர் வீடு, அடுத்த வீடு என போய் கொண்டிருந்தார்கள், வசூல் செய்தபடி.

ஓரிரு மாதங்களுக்கு பின், இதேபோல வேறொரு ஜோடி, வேறொரு இடத்தில்  வசூல் செய்துக் 

கொண்டிருந்தது.  இன்று இவர்கள். இவர்களைக் கண்தும், பழைய நினைவுகள் வர, எம்மால் 

எதுவும் தர முடியாது. எத்தனை ஜோடிகள் இதுபோல் கிளம்பியிருக்கிறீர்கள் என 

கூறியதும், தாமதமே செய்யாமல், உடனடியாக இடத்தைக் காலி செய்து விட்டு சென்றனர். 

இவர்களைப் பார்க்கும் போது, பிராமணர் வேசமிட்து, வீடுகளை நோட்டமிடுபவர்களைப் 

போலவேதான் தோன்றியது.  என்ன உரிமை, தானாகவே கதவை திறந்துக் கொண்டு உள்ளே 

வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் யாரிடம் புகர் கொடுப்பது? எங்கள் வீட்டிற்கு, இருவர் 

இருவராக, இரு முறை வந்தவர்கள் நன்கு பேர், செல்லும் வழியில் கண்டவர்கள் இருவர், ஆக 6 
பேரில் ஒருவர் கூட நோஞ்சானாக இல்லை. திடகார்த்தமாகவும், கட்டுமஸ்தான உடலை 

உடையவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய 

செய்தியாகும். சாதாரணமாக  பிச்சைக்காரர்கள் வந்தால் 1 ரூபாய், 2 ரூபாய் போடுவோம், 

இல்லாவிட்டால் போய் வா என விரட்டி விடுவோம். இவர்களோ பட்டுடுத்தி ஏமாற்றி, ஏச்சி 

பிழைக்கும் கௌரவ பிச்சைக்காரர்களாக இருக்கிரார்கள்.

நண்பர்களே! உங்கள் இல்லங்களுக்கும், இப்படி யாராவது, வசூல் என்ற பெயரிலும், வேறு 

முறையிலும் வரலாம். வீட்டில் உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும்  முன்னெச்சரிக்கையாக 

சொல்லி வைக்கவும். இதற்கு முன் இதுபோல் வந்தவர்களைப் பற்றி, யாம், எமது 

மனைவியிடம் கூறாததால், வந்த பிராமணர்களுக்கு  நம்மால் முடிந்ததை கொடுத்து 

அனுப்பியிருக்கலாம் என்ற வருத்தம், ஆதங்கம் எம் மீது மனைவிக்கு ஏற்பட்டது. விவரம் 

கூறியதும் புரிந்துக் கொண்டார்.