Translate

Showing posts with label கண் சாடை காட்டினவனே. Show all posts
Showing posts with label கண் சாடை காட்டினவனே. Show all posts

Monday, February 19, 2018

கண் சாடை காட்டினவனே




கண்களில் உன் னுருவம்
காத்தி ருக்கிறேன் உனக்காக.
கலங்காமல் நானிருக்க,
காலம் கடத்தாமல் வந்து விடு.

நிலைப்படியோ கைப்பிடியால்
தேய்கிறதே
என்னுடன் அது விணைந்து.

ஒவ்வொரு ஒலியும்
உன்னொலியாய்
உருக்கொண்டு
உற்று நோக்க செய்கிறதே.

வழி காட்டும் நிகழ்வுகளோ
விழி வந்து எட்டுகையில்,
கானலாய் ஆகிறதே
கண்களை நோகச் செய்து.

முக சுணக்கம் காட்டாமல்
மலர்ந்தவளாய் இருக்கின்றேன்,
நீ காண நேருகையில்
மகமுனது வாடாது
விரைந்தென்னை னீயடைய.

வாசலில் நான் வரவேற்க்க
வளைத்தேனை நீயண்ணைக்க,
வாசமாய் காத்திருக்கிறேன்
வந்து அணைத்திடுவாயே விரைவாக.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏